மாறப்போகும் ஸ்மார்ட்போன் பேட்டரிகள். புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு! 

Stacked Battery
Stacked Battery

ஸ்மார்ட்போன் சாதனங்கள் இந்த உலகையே தலைகீழாக மாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், அந்த ஸ்மார்ட்போன் சாதனத்தையே முற்றிலுமாக மாற்றும் புதிய ஸ்டாக்டு பேட்டரி தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனி பவர் பேங்க், சார்ஜர் என எதையுமே அடிக்கடி பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. 

அடுத்த ஆண்டு வெளிவர இருக்கும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் Stacked Battery என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பேட்டரிகள் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது நாம் அனைவருமே 5G இணைய வேகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. 

ஸ்மார்ட் ஃபோன்களும் காலப்போக்கில் தன்னுடைய பரிணாம வளர்ச்சியை சந்தித்து வருகிறது. ஆனால் இன்றளவும் மாற்ற முடியாத பல விஷயங்களில் ஸ்மார்ட்போன் பேட்டரி இருந்து வந்தது. செல்போன்களின் தொடக்க காலத்தில் நாம் பயன்படுத்திய ஃபோன்களின் பேட்டரிகள், இரண்டு நாட்கள்வரை ஆயுளைக் கொண்டிருக்கும். ஆனால் ஸ்மார்ட்போன்களில் உள்ள அதிகப்படியான அம்சங்கள் காரணமாக பேட்டரியின் ஆயுல் ஒரு நாள் முழுவதும் வருவதே அரிதாகிவிட்டது. இந்த பிரச்சனையை சரி செய்ய பாஸ்ட் சார்ஜிங் முறை கண்டுபிடிக்கப்பட்டாலும், அடிக்கடி சார்ஜ் போடாமல் ஃபோனை நீண்ட நேரம் பயன்படுத்துவது கடினமாகவே உள்ளது. 

இந்த நிலைமையை மாற்றுவதற்காக சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள், ஏற்கனவே எலக்ட்ரானிக் வாகனத்துறையில் பயன்படுத்தப்படும் அடுக்கப்பட்ட பேட்டரி தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் ஃபோனில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஸ்மார்ட் போன் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால், நீண்ட நேரம் வரும் என நம்பப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் செங்குத்தாக பல பேட்டரிகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடக்கப்பட்டு, ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட பேட்டரி செல்கள் உள்ளது. 

இந்த புதிய பேட்டரி தொழில்நுட்பத்தின் நன்மைகள் என்னவென்று பார்க்கும்போது, மெலிதான போனில் இத்தகைய பேட்டரியைப் பொருத்த இது உதவும். அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பேட்டரி அமைப்புகள், சிறிய இடத்திலேயே அதிக ஆற்றலை சேமிக்கிறது. இதனால் பேட்டரியின் ஆயுல் அதிகமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், சாதனங்கள் மேலும் மெலிதாக இது வழிவகுக்கும். 

இந்த பேட்டரியில் மேம்படுத்தப்பட்ட வெப்ப மேலாண்மை, பேட்டரி செயல்திறன் மற்றும் பாதுகாப்பான சார்ஜிங் மற்றும் டிஸ்சார்ஜிங் முறையால் அதிக வெப்பம் இல்லாமல் இருப்பது போன்ற பல அம்சங்கள் இந்த அடுக்கப்பட்ட பேட்டரிகளில் இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com