மின்கட்டணத்தை குறைக்கும் கூரை சூரிய சக்தி: செலவு முதல் அரசு மானியம் வரை முழு வழிகாட்டி!

வீட்டுக்கூரையில் சூரிய தகடுகள் பொருத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் மின்கட்டணம் குறைந்து, சொத்து மதிப்பு உயர்ந்து, நீண்டகால சேமிப்பை தரும் நம்பகமான முதலீடாக கூரை சூரிய சக்தி மாறுகிறது
rooftop-solar
rooftop-solar
Updated on

கூரை மேல் சூரிய ஆற்றல்

வீட்டின் கூரையில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக சூரிய தகடுகளை பொருத்துவது கூரை சூரிய சக்தி எனப்படுகிறது. சூரிய ஒளியை வீட்டில் பொருத்தப் பட்டிருக்கும் தகடுகள் உள்வாங்கி சக்தியாக மாற்றி பயன்படுத்தக்கூடிய வடிவமாக மின்சாரத்தை மாற்றுகிறது .இதில் ஒரு இன்வெர்ட்டர் உள்ளது

கூரை சூரிய ஆற்றலின் பயன்கள்

கூரைமேல் அமைக்கப்பட்டுள்ள நன்கு திட்டமிடப்பட்ட சூரிய சக்தி அமைப்புகள் வீட்டின் பெரும்பகுதி மின் பயன்பாட்டை பூர்த்தி செய்து மின் கட்டணத்தை குறைத்து சேமிப்பிற்கு வழிவகுக்கின்றன. இந்த அமைப்புகள் பராமரிக்க எளிதாக இருப்பதோடு பல ஆண்டுகள் நீடித்து உழைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதால் இது அமைக்கப்பட்டுள்ள வீடுகளில் சொத்தின் மதிப்பை உயர்த்தி காட்டுகின்றன. மேலும் உயரும் மின்கட்டணங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.

சூரிய கூரை அமைப்புகளின் வகைகள்

மின்கலன்கள் பயன்படுத்தாத 'மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட அமைப்பு 'விலை மலிவாக உள்ளதால் இதுவே பெரும்பாலானவர்களின் பொதுவான தேர்வாக உள்ளது. மின்சார வினியோகம் நம்பகத்தன்மையற்ற பகுதிகளில் பயன்படுத்தப்படும்' மின்சார இணைப்பு இல்லாத அமைப்பு' தன்னிச்சையாக இயங்கி மின்கலன்களில் மின்சாரத்தை சேமிக்கிறது. மின் கட்டமைப்புடன் இணைந்து காப்பு பணிக்காக மின்சாரத்தை சேமித்து வைக்கும் கலப்பின அமைப்பு  இரண்டு விருப்பங்களை ஒருங்கிணைத்தாலும் செலவு அதிகம் பிடிக்கும்.

கூரை சூரிய ஆற்றல் விலைப்பட்டியல்

கூரை சூரிய ஆற்றலுக்கு செலவிடும் தொகை, அளவு மற்றும் தொழில்நுட்ப கூறுகள் பொறுத்து மாறுபடுகிறது.

1 kW அமைப்பு: ரூ 70,000 - ரூ 90,000

3 kW அமைப்பு: ரூ. 1.8 லட்சம் - ரூ. 2.5 லட்சம்

5 kW அமைப்பு: ரூ 2.8 லட்சம் - ரூ 4 லட்சம்

10 kW அமைப்பு: ரூ. 5 லட்சம் மற்றும் அதற்கு மேல்

கூரை சூரிய ஆற்றலுக்கு அரசு மானியம் வழங்குவதோடு, நாம் செய்யும் ஆரம்ப முதலீடு சில ஆண்டுகளில் மின் கட்டணம் மூலம் சேமிக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
உங்க வீட்டில் ஏர் கூலர் இருக்கா? சம்மரில் ஜில் என்று காற்று வர இந்த டிப்ஸை தெரிஞ்சுக்கோங்க..!
rooftop-solar

கூரை சூரிய  அமைப்பு திட்டமிடுதல்

வீட்டின் கூரை பகல் பொழுதில் பெரும்பாலான நேரம் நிழலால் மறைக்கப்படாமல் இருப்பதோடு திறந்த வெளியாக இருக்கவேண்டும். ஏனெனில் சிறிய நிழல்கள் கூட உற்பத்தியை பாதிக்கும் என்பதால் எதிர்காலத்தில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட சரியான திட்டமிடல் மிகவும் அவசியம்.

செலவு மற்றும் செயல் திறனை பாதிக்கும் காரணிகள்

கூரை சூரிய அமைப்பு அமைப்பதற்கு முன்பாக  கூரையின் வலிமையை உறுதி செய்து கொள்வதோடு, குறைந்த இடத்தில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய அதிக செயல் திறன்கொண்ட பேனல்களை நிறுவ வேண்டும். சீரான வெளியீட்டை பராமரிக்க உதவும் இன்வெர்ட்டரின் நம்பகத் தன்மையை உறுதி செய்து கொள்வதோடு, காப்பு அமைப்புகள் செலவை அதிகரித்தாலும் வசதியை அளிக்கும் என்பதால் அவற்றை தேர்வு செய்ய வேண்டும். அதிக நேரடி சூரிய ஒளி ஒட்டுமொத்த உற்பத்தியை மேம்படுத்தும் என்பதால் தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க நிறுவுதல் தரத்தை உறுதி செய்து கொள்வது நல்லது.

கூரை சூரிய சக்தி பராமரிப்பு

பேனல்களில் உள்ள தூசிகளை தவறாமல் சுத்தம் செய்வதால் மின் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். செயல்திறன் குறைந்தால் இணைப்புகளை சரி பார்ப்பதோடு, மின் உற்பத்தி முறையை கண்காணிக்க வேண்டும். வருடாந்திர பரிசோதனைகள் கூரை சூரியசக்தி அமைப்பை சீராக இயங்கவைக்க உதவும்.

வீட்டில் மின்சாதன பயன்பாட்டை குறைக்க முடியாது. அதே போல உயர்ந்து வரும் மின் கட்டணத்தையும் சமாளிக்க மாற்று வழியாக இருக்கும் கூரை சூரியசக்தி ஆற்றல் அமைப்பை திட்டமிடுவது புத்திசாலியான நம்பகத்தன்மையான முதலீடாகும்.

logo
Kalki Online
kalkionline.com