வாகன விற்பனையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் வகை பைக்கின் புதிய மாடலை தற்போது அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாகன பிரியர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களையும் பார்த்தவுடன் ரசிக்க செய்வது புல்லட் வகை மோட்டார் பைக்குகள் ஆகும். இதனுடைய கம்பீரத் தோற்றம், சத்தம் ஆகியவை புல்லட் ஓட்டுபவர்களுக்கு கௌரவமாகவே மாறிவிட்டது. 1932 ஆம் ஆண்டு ராயல் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புல்லட் வகை மோட்டர் பைக் அறிமுகம் செய்தது. 90 ஆண்டுகளை நிறைவு செய்தும் இன்று வரை விற்பனையில் முக்கிய பங்காற்று வருகிறது புல்லட் பைக்குகள்.
ஆண்டுகள் நகர்ந்து கொண்டே இருந்தாலும் விற்பனையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள புல்லட் பைக்குகள் மீது மக்கள் வைத்துள்ள ஈர்ப்பை பார்த்த ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் 2010 ஆம் ஆண்டு யுசி என்று அழைக்கப்படும் யூனிட் கன்ஸ்ட்ரக்சன் வகைக்கு புல்லட் பைகளை அறிமுகம் செய்தது. மேலும் அதன் பிறகு வடிவமைப்பில் மாற்றம், சத்தத்தில் மாற்றம், மாறுபட்ட தோற்றம், பல்வகை வண்ணங்கள் என்ற பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் புல்லட் 350 பைக்கை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஜே சீரிஸ் இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதனுடைய தோற்றத்திலும் மேலும் மெருகேற்றப்பட்டிருக்கிறது. இந்த பைக் 350 சிசி இன்ஜின் திறன் கொண்டது ஆகும். மேலும் இந்த புதிய புல்லட் 350 மிலிட்டரி, ஸ்டாண்டர்ட், பிளாக் கோல்ட் ஆகிய வண்ணங்களில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பைக் வகைக்கு 1.73 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் சார்பில் தற்போது புதிய மாடல் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் புல்லட் பைக்கள் விற்பனை கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.