என்னது 110 இன்ச் டிவியா? விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!

SAMSUNG UHD TV
SAMSUNG UHD TV
Updated on

பிரபல நிறுவனமான சாம்சங் இந்தியாவில் 110 இன்ச் மைக்ரோ எல்இடி டிவியை அறிமுகம் செய்துள்ளது.

தொலைகாட்சி கண்டுப்பிடிக்கப்பட்ட காலத்தில் மக்களின் பொழுது போக்கிற்காக டிவி அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல்வேறு வகையில், பல்வேறு தொழில்நுட்பங்களுடன் அசத்தலான டிவிகள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து, புது புது வித்தியாசங்களை அறிமுகப்படுத்துவதில் பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில், சாம்சங்க் நிறுவனம் இந்தியாவிலேயே புதிதாக 110 இன்ச் மைக்ரோ எல் இ டி டிவியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிவியில், பிரீமியம் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.

24.8 லட்சம் மைக்ரோமீட்டர் அளவிலான சிறிய LED-களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் டிவி திரையரங்கு அனுபவத்தைக் கொடுக்கும் என்று சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சோலார்செல் ரிமோட் உடன் வரும் இந்த மினி திரையரங்கு போன்ற டிவி, குறைந்த கீக்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரிமோட்டில் பேட்டிரி இல்லை என்றும், இன்டோர் லைட்டிங் மூலம் இதை சார்ஜ் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டால்பி அட்மோஸ் ஆடியோ அம்சத்துடன் வெளிவந்துள்ள இந்த டி.வி., ஸ்பீக்கர்கள் வழியாக 3D சரவுண்ட் அனுபவத்தை உணர முடியும் என சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.இந்த 110 இன்ச் சாம்சங் டிவியின் விலை ஒரு கோடியே, 14 லட்சத்து 99 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. NEXT> சாம்சங் இணையதளத்தில் விற்பனைக்கு வரும் இந்த பிரமாண்ட டிவியை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com