சமீபத்தில் வெளியான சாம்சங் S24 ப்ரீமியம் ஸ்மார்ட்போனில், டிஸ்ப்ளே மோசமாக இருப்பதாக பயனர்கள் புகார் தெரிவித்ததையடுத்து, சாம்சங் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் நடந்த சாம்சங் நிறுவனத்தின் வெளியிட்டு நிகழ்வில் அந்நிறுவனத்தின் பிரபல S சீரியஸ் மாடலில் புதிய மாடலான S24 சீரிஸ் மொபைல்களை அந்நிறுவனம் வெளியிட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் ஃபோனின் டிஸ்ப்ளேவில் குறை இருப்பதாக அதன் பயனர்கள் வருத்தம் தெரிவித்துள்ளதால், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
பயனர்களின் புகார்களின்படி, பழைய மாடல் ஸ்மார்ட்போன்களை விட S24 மாடலில் டிஸ்ப்ளே மங்களாக இருப்பதாக பயனர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது டிஸ்ப்ளேவின் அடிப்பக்கத்தில் இருக்கும் கருப்பு நிறத்தால், படங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும், போனின் டிஸ்ப்ளே மங்களாக இருப்பதாகவும் குறை கூறியுள்ளனர்.
இதற்கு சாம்சங் நிறுவனம் அளித்த விளக்கத்தில், “S24 பிரீமியம் ஸ்மார்ட்போன்களின் டிஸ்பிலே மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கையாக படங்கள் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே பிரதிபலிக்கும். இதனால் பயனர்களின் கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. நீண்ட நேரம் மொபைலைப் பயன்படுத்தினாலும், கண்கள் சோர்வடையாது” எனத் தெரிவித்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் தயாரிப்பு குறித்து பெரும்பாலும் நமக்குத் தெரிவதில்லை என்பதால், இந்நிறுவனத்தின் விளக்கம் விமர்சனங்களுடன் மாறுபட்டதாக உள்ளது என்பதை உண்மை. குறிப்பாக samsung நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சில நாடுகளில் ஸ்னாப்டிராகன் சிப்ஸ் பயன்படுத்தி அறிமுகம் செய்யப்படும். அதே ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் சில நாடுகளில் எக்சினோஸ் சிப்செட் உடன் வெளியாகிறது. ஏன் இந்த பாரபட்சம் என்பது யாருக்கும் தெரியவில்லை.
அதே போலதான் இந்தியாவில் வெளியாகி உள்ள S24 மாடல் போன்களிலும் எக்ஸினோஸ் 2400 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாம்சங் இந்த பாரபட்சத்தை நிறுத்த வேண்டும் என்பதே பயனர்களின் கோரிக்கையாக இருக்கிறது. இதற்கு எதிர்காலத்திலாவது தீர்வு கிடைக்கிறதா எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.