AI பற்றிய உண்மையை தைரியமாகச் சொன்ன பிரபலம்! 

The celebrity who bravely told the truth about AI
The celebrity who bravely told the truth about AI

AI தொழில்நுட்பத்தின் அறிமுகம் பல துறைகளில் அபரிமிதமான மாற்றங்களை ஏற்படுத்தி வரும் வேளையில், சில குறிப்பிட்ட தொழில்களுக்கும் வேலைக்கும் அச்சுறுத்தல் ஏற்படும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த மாற்றத்தை முற்றிலும் வித்தியாசமாகப் பார்க்கிறார்கள். 

இதுகுறித்து தன் கருத்தைத் தெரிவித்த ஐபிஎம் நிறுவனத்தின் இந்தியா மற்றும் தெற்காசிய நிர்வாகியாக இருக்கும் சந்தீப் பட்டேல், “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உண்மையில் வேலை வாய்ப்புகளை குறைப்பதை விட மேலும் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். மேலும் IANS செய்தி நிறுவனத்துடனான உரையாடலில், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி பேசுகையில், “AI தொழில்நுட்பத்தால் வேலை வாய்ப்புகளின் நிகர எண்ணிக்கை அதிகரிக்கும். இதுபோன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு முதலில் மக்கள் அஞ்சுவது வழக்கம்தான்.

முதல் முதலில் இணையம் அறிமுகம் செய்யப்பட்டபோது இப்படிதான் நடந்தது. குறிப்பாக செய்தித்தாள் அச்சுத்தொழிலில் வேலை வாய்ப்புகள் குறைந்தது. ஆனால் இணையதளத்தால், டிஜிட்டல் மார்க்கெட்டிங், வெப் டிசைனிங், டேட்டா சயின்ஸ் மற்றும் வெப் பப்ளிஷிங் போன்றவற்றில் பல புதிய வேலைகள் உருவாகின. இந்த புதிய துறைகளில் தற்போது பல கோடி பேர் பணியாற்றி வருகின்றனர். எனவே புதிய துறைகளைக் கண்டு அஞ்சுவதற்கு பதிலாக மக்கள் அவர்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்” என படேல் தெரிவித்தார்

தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கிட்டத்தட்ட 46 சதவீத நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷனில் தங்கள் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். ஆனால் இதில் உள்ள பெரிய சவால் என்னவென்றால், இதைப் பற்றி எந்த அடிப்படை அறிவும் இல்லாத பெரிய பணியாளர் கூட்டத்திற்கு, பயிற்சி அளிப்பது அவ்வளவு எளிதானதல்ல. பணியாளர்கள் அனைவருக்கும் கோடிங் மற்றும் ஏஐ சார்ந்த அறிவு இருக்கும் என சொல்ல முடியாது.

இதையும் படியுங்கள்:
OpenAI SORA: வந்துவிட்டது Sora AI. இனி கணப்பொழுதில் வீடியோ உருவாக்கலாம். 
The celebrity who bravely told the truth about AI

இருப்பினும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தொழிலாளர்கள் தன் திறன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவசியமாகும். இல்லையேல் அத்தகைய திறன் படைத்தவர்கள் உங்களது வேலையைப் பறித்துக்கொள்ளும் வாய்ப்புள்ளது. இன்றைய நவீன உலகில் தொடர்ச்சியாக புதிய விஷயங்களைக் கற்றுக் கொண்டிருப்பது உங்களை பல ஆபத்துகளில் இருந்து காக்கும். 

எனவே புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு அஞ்சாமல், அதில் உங்கள் திறமைகளை எப்படி வளர்த்துக் கொள்ளலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com