DeepFake வீடியோ பயன்படுத்தி நடந்த நூதன கொள்ளை! 

Scam using DeepFake video
Scam using DeepFake video

AI தொழில்நுட்பம் மனிதர்களின் வரப்பிரசாதமாக இருக்கும் என நினைக்கப்பட்ட நிலையில் தற்போது பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. அதாவது இதைப் பயன்படுத்தி அதிகப்படியான இணையக் குற்றங்கள் நடந்து வருகிறது. அதுவும் இத்தகைய குற்றங்கள் இணையத்திலேயே நடந்து விடுவதால், ஏமாற்றுக்காரர்களை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. 

சமீபத்தில் அப்படிதான் DeepFake செய்யப்பட்ட காணொளியைப் பயன்படுத்தி கொள்ளை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இதில் மூத்த குடி மக்களை குறிவைத்து ஒரு கொள்ளை கும்பல், அவர்களை ஆபாச வலையில் விழவைத்து பணம் பறித்து வரும் சம்பவம் நடந்து வருகிறது. இச்சம்பவம் போலீஸ்காரர்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. அதுவும் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலீஸ்காரர்கள் மிரட்டுவது போலவே வீடியோக்கள் தயாரித்து, வயதானவர்களை மிரட்டி ஒரு மர்ம கும்பல் பணத்தைப் பறிப்பது குறிப்பிடத்தக்கதாகும். 

கடந்த மாதம் உத்தரபிரதேச மாநில காவல்துறை அதிகாரியின் முகம் மற்றும் குரலைப் பயன்படுத்தி DeepFake செய்யப்பட்ட போலி வீடியோ மூலமாக, 76 வயதான முதியவரை மிரட்டி பணம் ஏமாற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் அந்த முதியவர், சமீபத்தில்தான் ஸ்மார்ட்போன் வாங்கி அதில் பேஸ்புக் கணக்கை தொடங்கியிருக்கிறார். 

இந்நிலையில் அவருக்கு கடந்த நவம்பர் 4ம் தேதி பேஸ்புக் வழியாக வீடியோ கால் வந்துள்ளது. அவர் அந்த அழைப்பை ஏற்ற சில நொடிகளில் ஒரு பெண்ணின் நிர்வாண காணொளி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக இணைப்பைத் துண்டித்துள்ளார். அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து அவருக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ கால் வந்துள்ளது. அதில் போலீஸ் சீருடை அணிந்த ஒரு நபர், சற்று முன்பு பேஸ்புக் வீடியோ காலில் வந்த ஆபாச காணொளியை அனுப்பி, “நான் தெரிவிக்கும் வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்ப வேண்டும். இல்லையேல் இந்த காணொளியை உங்களுடைய நண்பர்களுக்கும் உறவினருக்கும் அனுப்பிவிடுவேன்” என மிரட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
DeepFake பற்றிய சுவாரசிய தகவல்கள்!
Scam using DeepFake video

இதனால் பயந்துபோன அந்த முதியவர் உடனடியாக அவர் அனுப்பிய வங்கிக் கணக்குக்கு ரூபாய் 5000 அனுப்பியுள்ளார். பிறகு அவ்வப்போது அந்த நபர் மீண்டும் மீண்டும் பணம் கேட்டபோதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இதுவரை 74 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பி இருக்கிறார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உண்டான அந்த முதியவர், தன் நண்பரிடம் இதுபற்றி பேசியபோது, காணொளியில் வரும் அந்த முகம் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியுடையது. அவர் இப்படியெல்லாம் செய்ய வாய்ப்பில்லை எனக் கூறி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

அப்போதுதான், போலீஸ் அதிகாரி போல DeepFake செய்யப்பட்ட காணொளியைப் பயன்படுத்தி பணம் பறித்தது தெரியவந்தது. இப்படி இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதவிதமாக கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பது அவசியமாகும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com