ஒரே நேரத்தில் உயிருடனும் உயிரில்லாமலும் ஒரு பூனை! விஞ்ஞான உலகையே குழப்பிய கதை!

schrodinger's cat experiment
schrodinger's cat experiment
Published on

சின்ன வயசுல நாம எல்லாரும் மாயாஜாலக் கதைகள் கேட்டுருப்போம். மந்திரவாதி ஒரு பொருளை மறைய வைப்பார், ரெண்டா வெட்டுனாலும் அது ஒண்ணா இருக்கும். இதெல்லாம் கதைன்னு நமக்குத் தெரியும். ஆனா, நிஜ உலகத்துல, விஞ்ஞானத்திலேயே அப்படி ஒரு மாயாஜாலம் மாதிரி ஒரு விஷயம் இருக்கு. அதுதான் 'ஷ்ரோடிங்கரின் பூனை' பரிசோதனை (Schrodinger's Cat Experiment). 

அந்தப் பெட்டிக்குள் என்ன இருந்தது?

முதல்ல ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திடணும். எர்வின் ஷ்ரோடிங்கர் அப்படிங்கிற விஞ்ஞானி நிஜமாவே ஒரு பூனையை வெச்சு இந்த சோதனையை செய்யல. இது முழுக்க முழுக்க ஒரு 'கற்பனைச் சோதனை' (Thought Experiment). அதாவது, மனசுக்குள்ளயே செஞ்சு பார்க்குற ஒரு சோதனை.

சரி, அந்த கற்பனைப் பெட்டிக்குள்ள என்ன இருந்துச்சு? முதல்ல, ஒரு பூனை. அப்புறம், ஒரு கதிரியக்க அணு (Radioactive Atom). இந்த அணு ஒரு மணி நேரத்துல சிதைஞ்சு போறதுக்கு 50% வாய்ப்பு இருக்கு, சிதையாமல் இருக்கவும் 50% வாய்ப்பு இருக்கு. அந்த அணுவோட ஒரு சுத்தியல் இணைக்கப்பட்டிருக்கும். 

அந்த சுத்தியலுக்குப் பக்கத்துல ஒரு விஷ வாயு பாட்டில் இருக்கும். இப்போ விஷயம் சிம்பிள். அந்த கதிரியக்க அணு சிதைஞ்சா, சுத்தியல் விழுந்து விஷப் பாட்டிலை உடைச்சிடும், பூனை செத்துடும். ஒருவேளை அந்த அணு சிதையலைன்னா, பூனை உயிரோட இருக்கும். இப்போ அந்தப் பெட்டியை மூடிடலாம்.

குழப்பம் இங்கேதான் ஆரம்பிக்குது!

ஒரு மணி நேரம் கழிச்சு, நாம அந்த பெட்டியை திறக்குறதுக்கு முன்னாடி, உள்ளே இருக்கிற பூனை உயிரோட இருக்கா இல்ல செத்துடுச்சா? 'அது 50-50 சான்ஸ், திறந்து பார்த்தாதான் தெரியும்'னு நீங்க சொல்றது கேக்குது. ஆனா, குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) விதிகள் படி, ஒரு அணுவை நாம பார்க்காத வரைக்கும், அது சிதைந்த மற்றும் சிதையாத என இரண்டு நிலைமையிலயும் ஒரே நேரத்துல இருக்கும். 

அது ஒரு மாதிரி 'குழப்பமான' நிலை. அதனால, அந்த அணுவோட சம்பந்தப்பட்டிருக்கிற பூனையும், நாம பெட்டியைத் திறந்து பார்க்குற வரைக்கும், உயிரோடு இருக்கிற மற்றும் செத்துப் போன என இரண்டு நிலைமைகளிலுமே ஒரே நேரத்தில் இருக்கும். 

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பால் குடிக்காத பூனை - தெனாலி ராமன் யோசனை!
schrodinger's cat experiment

பூனை ஒரே சமயத்தில் உயிருடனும், உயிரில்லாமலும் இருக்கும். எப்போ நாம அந்தப் பெட்டியைத் திறந்து 'பார்க்கிறோமோ', அப்போதான் அந்த இரட்டை நிலைமை உடைஞ்சு, பூனை உயிரோட இருக்கா இல்லையான்னு ஒரு முடிவுக்கு வரும்.

இதன் அர்த்தம் என்ன?

ஷ்ரோடிங்கர் இந்தக் கற்பனை மூலமா என்ன சொல்ல வந்தார்னா, அணுக்கள் மாதிரி சின்ன சின்ன துகள்களுக்குப் பொருந்துற குவாண்டம் விதிகள், பூனை மாதிரி பெரிய பொருட்களுக்குப் பொருந்தும்போது எவ்வளவு அபத்தமா இருக்கு பாருங்கன்னு கேக்குறதுக்குத்தான். "ஒரு பூனை எப்படி ஒரே நேரத்துல உயிரோடவும் செத்தும் இருக்க முடியும்? இது என்னடா முட்டாள்தனமா இருக்கு?" அப்படின்னு மற்ற விஞ்ஞானிகளை நோக்கி கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டிற்கு கருப்பு பூனை வருகிறதா? இனி நீங்கள் தான் கோடீஸ்வரர்!
schrodinger's cat experiment

'ஷ்ரோடிங்கரின் பூனை பரிசோதனை' யதார்த்தம் என்றால் என்ன, உண்மை நிலை என்றால் என்ன என்று நம்மைக் கேள்விகேட்க வைக்கும் ஒரு ஆழமான விஞ்ஞானப் புதிர். நாம் பார்க்காதபோது, ஒரு பொருள் எப்படி இருக்கிறது என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது என்பதை இது விளக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com