நம்முடைய மூளையின் நினைவுப்பகுதி மற்றும் அந்த நினைவுகளை உணரும் பகுதிக்கு இடையே தகவல் பரிமாற்றம் எப்படி நடக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து பல காலமாக ஆய்வு மேற்கொண்டு வந்த ஆய்வாளர்கள் இறுதியில் நினைவகம் தொடர்பான மூளையில் உள்ள பகுதிகள் முதலில் ஒரு தன்னிச்சையை புகைப்பட உலகத்தை உருவாக்கிக் கொள்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வின் முடிவுகள் நேச்சர் நியூரோ சைன்ஸ் என்ற இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இந்த தகவல் பரிமாற்றத்தை கண்டுபிடிப்பதற்கு பல நபர்களிடம் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள் ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது நினைவகம் மற்றும் உணர்தல் செயல்பாடுகளை சோதித்தனர். அந்நேரத்தில் அவர்களின் மூளையின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது MRI ஸ்கேன் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்டது. அச்சமயத்தில் மூளையில் உள்ள நினைவகம் மற்றும் உணர் பகுதிகளுக்கு இடையே புஷ் புல் போன்ற குறியீடு அனைத்தையும் நிர்வகிக்கும் பொறிமுறை நடப்பதை ஆய்வுக்குழு கண்டறிந்தது.
அதாவது ஒளியானது நம்முடைய விழித்திரையில் படும்போது மூளை அந்த குறிப்பிட்ட ஒளியின் வடிவத்தை குறிப்பதற்கு செயல்பாட்டை அதிகரித்து பதில் அளிக்கிறது. அதற்கு நேர் மாறாக மூளையின் நினைவாகப் பகுதியில் ஆட்சித் தூண்டுதல்கள் ஏற்படுகின்றன. இந்த தூண்டுதலினால் நரம்புகளுக்கு மத்தியே தகவல்கள் கடத்தப்பட்டு அனைத்தும் செயல் வடிவம் பெறுகிறது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த ஆய்வு முடிவுகளின் வழியாக மூளை எவ்வாறு தகவல்களை உணர்விலிருந்து நினைவுகத்திற்கு மாற்றுகிறது என்பது பற்றியும் தீவிரமாக விஞ்ஞானிகள் சோதித்து வருகின்றனர். இந்த நிலைகளைப் புரிந்து கொள்வது மூலமாக மனித மூளையின் செயல்பாடுகளைக் கண்டறிந்து நினைவுகளை மீட்டெடுப்பதற்கான ஆழமான தெளிவு நமக்கு கிடைக்கும் என இந்த திட்டத்தின் இயக்குனர் ஸ்டீல் கூறியுள்ளார்.
மனித மூளை தொடர்பான இந்த ஆய்வு சுயநினைவை இழந்தவர்களுக்கும், அல்சைமர் பாதிப்புகளால் மறதி ஏற்படுபவர்களுக்கும் தீர்வைக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது.