இமெயில் அனுப்ப தடுமாறும் இளைய தலைமுறை: ஆய்வில் பகீர் தகவல்!

இமெயில் அனுப்ப தடுமாறும் இளைய தலைமுறை: ஆய்வில் பகீர் தகவல்!

இணையம் பற்றி புரிதல் இல்லாத இளைய தலைமுறையினர் குறைவு. சோஷியல் மீடியாவில் நடைபெறும் அனைத்தும் சங்கதிகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் வைரலாகிறது. ஆனால், 15 முதல் 29 வரையிலான வயதுடைய இளைய தலைமுறையினரில் 70 சதவீதம் பேருக்கு இமெயிலில் ஒரு பைலை அட்டாச் செய்து அனுப்பத் தெரியாது என ஆய்வறிக்கை கண்டறியப்பட்டுள்ளது. ஆச்சர்யமாக இருக்கிறதா?

இமெயில் உபயோகிப்பது மிகக்குறைவு. அனைத்தும் வாட்ஸ்அப் வழியாகவே பரிமாறப்படுகின்றன. ஒரு பார்மல் கடிதம் எழுத தயங்கி நிற்பவர்கள் நிறைய பேர். எதுவாக இருந்தாலும் கோர்வையாக இரண்டு வாக்கியங்கள் கூட எழுத தெரியாது. 60 சதவீதத்தினருக்கு ஒரு பைலை ஓரிடத்திலிருந்து காப்பி செய்து இன்னொரு இடத்தில் வைக்கத் தெரியாது.

80 சதவீத இளைஞர்களுக்கு ஒரு கணிணியிலிருந்து இன்னொரு கணினிக்கு கோப்புகளை மாற்றத் தெரியாது. 8 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே பிரசென்டெஷன் உருவாக்கத்தெரியும். அதில் இமேஜ், டெக்ஸ்ட் சரியாக பார்மேட் செய்து, சொல்ல வந்த விஷயத்தை கச்சிதமாக சொல்லத் தெரியும்.

நேஷனல் சாம்பிள் சர்வே ஆபிஸ் (NSSO) சென்ற மாதம் எடுத்த சார்வேயில் இளைய தலைமுறையினரின் பலவீனங்கள் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டுள்ளன. இளைய தலைமுறையினர் மத்தியில் தகவல் தொழில்நுட்பத்தை திறமையாக பயன்படுத்துபவர்கள் பற்றிய சர்வேயில் இத்தகைய முடிவுகள் வெளியாகியிருக்கின்றன.

ஆண்ட்ராய்டு ஆப்பில் ஒரு அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யத் தெரியும். லேப்டேப்பில் செய்யத் தெரியுமா? எக்ஸெல் ஷீட்டை திறந்து அங்குள்ள டேபிளில் உள்ள எண்களை பார்முலாவை பயன்படுத்தி கணக்கீடு செய்ய வேண்டும். கணினியில் உள்ள கோப்பை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்த வேண்டும். இவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்துதான் சர்வே எடுக்கப்பட்டிருக்கிறது.

நாளைய உலகை எதிர்கொள்ள இத்தகைய அடிப்படை தொழில்நுட்ப அறிவு தேவைப்படுகிறது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங் துறையில் 38 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட இருககின்றன. டேட்டா அனலிஸ்ட், சம்பந்தப்பட்ட துறையில் வேலைவாய்ப்புகள் 33 சதவீதமும், டேட்டா எண்ட்ரி சம்பந்தப்பட்ட பணிகள் 32 சதவீதமும் இருக்கப்போகின்றன. அதற்கு தயாராக வேண்டுமென்றால் குறைந்தபட்ச தொழில்நுட்ப அறிவு அவசியம்.

ஆர்ட்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், இனி வரும் காலங்களில் அனைத்து துறைகளையும் ஆளப்போகிறது. இது சாமானியர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளை சாத்தியமாக்கும் என்கிறார்கள். ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் குறித்து ஆழமாக படிக்கப்போகிறவர்கள் இன்ஜினியரிங் படிப்பு படித்தவர்கள் மட்டுமல்ல. ஆங்கிலம், வரலாறு போன்று பிற துறைகளில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் படிக்க வேண்டியிருக்கும்.

சரி, இளைய தலைமுறையினரில் எத்தனை பேருக்கு கம்ப்யூட்டர் புரோகிராம் எழுதத் தெரியும்? இதுவொரு அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்தான். 15 முதல் 29 வரையிலான இளைய தலைமுறையில் 2.4 சதவீதத்தினருக்கு மட்டுமே புரோகிராம் எழுத வரும். அதாவது நூறு பேரில் மூவருக்கு மட்டும்தான் நிரல் எழுத வருமாம்!

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com