வந்தது மிஸ்டுகால், போனது பணம். அதிர வைக்கும் SIM Swap Scam!

 Shocking SIM Swap Scam.
Shocking SIM Swap Scam.

டெல்லியைச் சேர்ந்த 35 வயதான பெண் வழக்கறிஞர் ஒருவர் சிம் கார்டு தொடர்பான மோசடியில் சிக்கி தனது வங்கிக் கணக்கிலிருந்த பணத்தை இழந்துள்ளார்.  

வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இந்த பெண்ணின் போனுக்கு மூன்று மிஸ்டு கால்கள் வந்துள்ளது. இதன் பிறகு தான் SIM Swap Scam என்று நூதன மோசடியில் அவர் மாட்டியுள்ளார். இத்தகைய மோசடிக்காரர்கள் ஒரு நபரின் டூப்ளிகேட் சிம் கார்டின் அணுகலைப் பெற்று அதைப் பயன்படுத்தி அவர்களது வங்கியில் உள்ள பணத்தைத் திருடுகிறார்கள். மேலும் இதை பயன்படுத்தி பலவிதமான திட்டங்களை தீட்டி மக்களை விதவிதமாக அவர்கள் ஏமாற்றும் வருகின்றனர்.

ஒரு மோசடி தொடர்பான விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்பட்ட உடனேயே அவர்கள் வேறு விதமான மோசடி திட்டங்களை அரங்கேற்றி மக்களுக்கு பல்வேறு வகையில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குறிப்பிட்ட மொபைல் நம்பரில் இருந்து மூன்று மிஸ்டு கால்கள் வந்துள்ளது. அதன் பின்னர் உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் இருந்த படங்கள் எடுக்கப்பட்ட மெசேஜ் வந்துள்ளது. 

இதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பாதிக்கப்பட்ட பெண் எவ்விதமான OTP அல்லது அவருடைய தனி விவரங்களை யாரிடமும் பகிரவில்லை. இருப்பினும் அவரது வங்கிக் கணக்கில் இருந்த லட்சக்கணக்கான ரூபாயை கொள்ளையர்கள் அபகரித்துள்ளனர். தான் பணத்தை இழந்தது தெரிந்ததுமே உடனடியாக போலீசில் புகார் அளித்த அந்த பெண், வேறு எண்ணிலிருந்து மிஸ்டு கால் வந்த எண்ணுக்கு போன் செய்தபோது, அது கொரியர் டெலிவரிக்காக செய்யப்பட்ட அழைப்பு என்று சொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அந்த நேரத்தில் தன்னுடைய நண்பரிடம் இருந்து அவருக்கு ஒரு கொரியர் வர இருந்ததால், அதற்கான அழைப்பாகத்தான் இருக்கும் என நம்பி தன் வீட்டு முகவரியை மோசடிக்காரர்களிடம் பகிர்ந்துள்ளார். அவர்கள் கூறியது போலவே அந்த பெண்ணுக்கும் ஒரு பேக்கேஜ் வந்துள்ளது. இதன் பிறகு தான் தனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் எடுக்கப்பட்டது தொடர்பான மெசேஜும் வந்ததாக அவர் கூறுகிறார்.

இதையும் படியுங்கள்:
பிரிட்டிஷ் அரசுக்கெதிரான சிப்பாய்க் கலகம் நடைபெற்ற வேலூர் கோட்டை!
 Shocking SIM Swap Scam.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், இந்த பெண் இதுவரை பயன்படுத்திய வெப்சைட்டுகள் சிலவற்றில் சில பிஷிங் லிங்குகளை சொடுக்கி உள்ளே சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதை பயன்படுத்திதான் மோசடிக்காரர்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து இருப்பார்கள் என போலீசார் நம்புகின்றனர். எனவே இதுபோன்ற மோசடிகளில் சிக்கிக் கொள்ளாமல் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com