Smart Watch Buying Tips: சரியான ஸ்மார்ட் வாட்ச் எப்படி தேர்வு செய்யணும் தெரியுமா? 

Smart Watch Buying Tips
Smart Watch Buying Tips

ஸ்மார்ட் ஃபோன்களுக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் வாட்ச்கள் இன்றைய காலகட்டத்தில் பிரபலம் ஆகி வருகிறது. இவற்றின் வளர்ச்சியை வைத்துப் பார்க்கும்போது, எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஃபோன்களை விட ஸ்மார்ட் வாட்ச்களே அதிகமாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனெனில் அந்த அளவுக்கு பல அம்சங்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் வருகின்றன. 

நீங்கள் ஒரு ஸ்மார்ட் வாட்ச் வாங்க முடிவெடுக்கிறீர்கள் என்றால், சரியானதை தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கலாம். எனவே உங்களுக்கு உதவதான் இந்தப் பதிவு. இப்பதிவில் ஸ்மார்ட் வாட்ச் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உங்களது தேவை: முதலில் நீங்கள் ஸ்மார்ட் வாட்ச் வாங்குவதற்கு முன், அதனால் உங்களுக்கு என்ன தேவை என்பது பற்றி நன்கு சிந்தியுங்கள். இதுவே உங்களது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும். பிட்னஸ் ட்ராக்கிங், அறிவிப்புகளைப் பெறுதல், அழைப்புகள் செய்தல் அல்லது ஸ்டைலான கேஜட் வைத்திருக்க ஆசைப்படுகிறீர்களா என்பதைக் கண்டறிந்து, ஸ்மார்ட் வாட்ச் வாங்க முடிவெடுப்பது நல்லது. 

ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியுமா?: ஸ்மார்ட் வாட்சை தேர்ந்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களில், அதை உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைக்க முடியுமா? என்பதைப் பாருங்கள். எல்லா ஸ்மார்ட் வாட்ச்களையும் எல்லா ஸ்மார்ட் ஃபோன்களிலும் இணைக்க முடியாது. எனவே இதில் சரியான தெளிவைப் பெற்றுக்கொண்டு ஸ்மார்ட் வாட்ச் தேர்வு செய்வது நல்லது.

டிசைன் மற்றும் டிஸ்ப்ளே: ஸ்மார்ட் வாட்ச்கள் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகின்றன. எனவே உங்களது தனிப்பட்ட விருப்பம், தேவை, செயல்பாடு போன்றவற்றை கவனித்து ஸ்மார்ட் வாட்ச் தேர்வு செய்யுங்கள். சில ஸ்மார்ட் வாட்ச்களில் எளிதாக மாற்றக்கூடிய பட்டைகள் கிடைக்கும். அவற்றை உங்கள் ஆடை மற்றும் மனநிலைக்கு ஏற்ப எளிதாக மாற்றிக் கொள்ளலாம். மேலும் சில ஸ்மார்ட் வாட்ச்களில் பயனர்களுக்கு ஏற்ற வகையில் டிஸ்ப்ளே இருக்கும். இதில் அதிக கவனம் செலுத்தி வாங்க முடிவெடுங்கள். 

இதையும் படியுங்கள்:
Rabbit R1: ஸ்மார்ட் ஃபோன்களுக்கே சவால் விடும் சாதனம்! 
Smart Watch Buying Tips

பேட்டரி ஆயுள்: ஸ்மார்ட் வாட்ச் வாங்க முடிவெடுக்கும்போது அதன் பேட்டரி ஆயுளை முக்கியமாக கவனிக்க வேண்டும். ஏனெனில் உங்கள் ஸ்மார்ட் வாட்ச் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக செயல்படும் என்பது மிக முக்கியமானதாகும். நீங்கள் எப்படி பயன்படுத்துவீர்கள்? அதற்கு எவ்வளவு பேட்டரி ஆயுள் தேவைப்படும்? என்பதனைக் கருத்தில் கொண்டு ஸ்மார்ட் வாட்ச்சை தேர்ந்தெடுக்கவும். கூடுதலாக அதை எப்படியெல்லாம் சார்ஜ் செய்யலாம் என்பதையும் கவனியுங்கள். சில ஸ்மார்ட் வாட்ச்கள் வயர்லெஸ் சார்ஜிங்-ல் வேலை செய்யும். சிலவற்றிற்கு கேபிள் தேவைப்படுகிறது. எனவே உங்களுக்கு எது வசதியாக இருக்கும் என்பதற்கு இணங்க தீர்மானிக்கவும். 

அம்சங்கள் மற்றும் செயல்பாடு: ஸ்மார்ட் வாட்ச் எவ்வளவு நேரம் தொடர்ச்சியாக இயங்குகிறது என்பதைத் தாண்டி அதன் அம்சங்கள் மற்றும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் விரும்பும் அம்சங்கள் ஸ்மார்ட் வாட்ச்சில் இருக்கின்றனவா என கவனியுங்கள். சில பிரபலமான அம்சங்களில், உடற்பயிற்சி கண்காணிப்பு, இதயத்துடிப்பு, ஜிபிஎஸ், தூக்க கண்காணிப்பு, இசைக் கட்டுப்பாடு மற்றும் அறிவிப்புகள் ஆகியவை அடங்கும்.

மேலே குறிப்பிட்டுள்ள 5 காரணிகளின் அடிப்படையில் உங்களுக்கு ஏற்ற சரியான ஸ்மார்ட் வாட்ச் எது என்பதைத் தேர்வு செய்து வாங்குங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com