இத தெரிஞ்சுக்காம யாரும் ஸ்மார்ட்போன் (Smartphone)  வாங்காதீங்க! 

Charging Mobile Phone(Smartphone) 
Charging Mobile Phone(Smartphone) 
Published on

புதிய ஸ்மார்ட்போனை(Smartphone) வாங்கிய உடன், அதை எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்ற தவறான நம்பிக்கை பலரிடம் இருந்து வருகிறது. இந்த செயல்முறை முற்றிலும் தவறானது என்பதை தொழில்நுட்பம் குறித்த புரிதலுடன் கூடிய வல்லுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஏன் எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்ற தவறான நம்பிக்கை ஏற்பட்டது?

இந்தத் தவறான நம்பிக்கைக்குக் காரணம், பழைய தலைமுறை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்ட நிக்கல் கேட்மியம் பேட்டரிகள்தான். இந்த வகை பேட்டரிகள், முதல் முறை சார்ஜ் செய்யும் போது அதிகபட்ச கொள்ளளவை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டவை. அதனால்தான், பழைய ஸ்மார்ட்போன்களை வாங்கும்போது, எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்ற அறிவுரை வழங்கப்பட்டது. இது பேட்டரியின் மொத்த கொள்ளளவை அதிகரித்து, நீண்ட நேரம் பயன்படுத்த உதவும்.

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் ஏன் இந்த முறை பொருந்தாது?

தற்போதைய ஸ்மார்ட்போன்களில் பெரும்பாலும் லித்தியம் அயான் அல்லது லித்தியம் பாலிமர் பேட்டரிகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை பேட்டரிகளுக்கு, முதல் முறை சார்ஜ் செய்யும் போது அதிகபட்ச கொள்ளளவை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே, புதிய ஸ்மார்ட்போனை(Smartphone) எட்டு மணி நேரம் சார்ஜ் செய்வது என்பது முற்றிலும் தேவையற்றது.

ஒவ்வொரு முறையும் 100% சார்ஜ் செய்ய வேண்டுமா?

இல்லை, ஒவ்வொரு முறையும் பேட்டரியை 100% வரை சார்ஜ் செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. ஒரு சார்ஜிங் சைக்கிள் என்பது, பேட்டரியை 0% இருந்து 100% வரை முழுமையாக சார்ஜ் செய்து பயன்படுத்துவதாகும். பேட்டரிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே சார்ஜிங் சைக்கிள்களை பயன்படுத்த முடியும்.

பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க என்ன செய்யலாம்?

  • பேட்டரியை எப்போதும் 20% க்கும் குறைவாகவோ அல்லது 80% க்கும் அதிகமாகவோ சார்ஜ் செய்ய வேண்டாம். இது பேட்டரியின் சார்ஜிங் சைக்கிள்களை குறைத்து, அதன் ஆயுளை அதிகரிக்கும்.

  • உற்பத்தியாளர் வழங்கும் அசல் சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். வேறு சார்ஜர்கள் பேட்டரியை சேதப்படுத்தும்.

  • ஸ்மார்ட்போனை அதிக வெப்பத்தில் இருந்து பாதுகாக்கவும். அதிக வெப்பம் பேட்டரியின் ஆயுளை குறைக்கும்.

  • பேட்டரியை முழுமையாக தீர்ந்து போக விட்டு, பின்னர் சார்ஜ் செய்வதைத் தவிர்க்கவும்.

இதையும் படியுங்கள்:
பூமிக்கு அடியில் 11 கி.மீ ஆழம்.. சீனா தேடும் மர்மம் என்ன? உலகை மிரட்டும் முயற்சி!
Charging Mobile Phone(Smartphone) 

புதிய ஸ்மார்ட்போனை (Smartphone) வாங்கிய உடன், அதை எட்டு மணி நேரம் சார்ஜ் செய்ய வேண்டும் என்ற தவறான நம்பிக்கையை தவிர்க்கவும். பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க, மேலே குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com