தங்க புதையலை காக்கும் நாகப்பாம்பு… உண்மை தெரிஞ்சா ஷாக் ஆவீங்க!

தங்கம் மற்றும் வெள்ளி புதையல்களை பாம்புகள் காவல் காப்பதாக கூறப்படும் கட்டுக்கதைகளின் பின்னால் ஒளிந்துள்ள சுவாரஸ்யமான அறிவியல் மற்றும் வரலாற்று உண்மைகள்.
Snake guarding treasure myth
Snake guarding treasure myth
Updated on

Snake guarding treasure myth: பழங்காலத்து கோட்டைகள் அல்லது பாழடைந்த நிலவறைகளில் பெரிய நாகப்பாம்புகள் தங்க காசுகள் மீது படுத்துக்கொண்டு புதையலை பாதுகாப்பது போன்ற காட்சிகளை நாம் பல திரைப்படங்களில் பார்த்திருப்போம். அதுமட்டுமின்றி, நமது தாத்தா பாட்டிகள் சொல்லும் கதைகளிலும் கூட இந்த பாம்பு மற்றும் புதையல் பற்றிய வதந்திகள் ஏராளமாக இருக்கும். 

உண்மையிலேயே பாம்புகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளியின் மீது ஆசை இருக்கிறதா என்பதை பற்றி வனவிலங்கு நிபுணர்கள், உயிரியலாளர்கள் கூறும் ஆச்சரியமான உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

பாம்புகளுக்கும் புதையலுக்கும் உள்ள தொடர்பு!

சில சமயங்களில் பழைய வீடுகளை இடிக்கும் போதோ அல்லது நிலத்தை தோண்டும் போதோ பழங்கால நாணயங்கள் கிடைக்கும். சரியாக அதே இடத்தில் ஏதாவது ஒரு பாம்பு வெளியே வருவதைப் பார்த்தவுடன், மக்கள் உடனடியாக அது புதையல் காக்கும் பாம்பு என முடிவுகட்டி விடுகிறார்கள். 

ஆனால் அறிவியல் ரீதியாக இது முற்றிலும் தவறான ஒரு நம்பிக்கையாகும். உண்மையில் சொல்லப்போனால், பாம்புகளுக்கு தங்கம், வெள்ளி அல்லது பணத்தின் மீது எந்த ஒரு ஈர்ப்பும் கிடையாது. அவை அனைத்தும் தற்செயலாக நடைபெறும் ஒரு நிகழ்வு மட்டுமே.

குளிர்ச்சியான இருண்ட இடங்கள்!

பழங்காலத்தில் அரசர்கள் தங்களது செல்வங்களை பாதுகாப்பாக வைக்க பாதாள அறைகள், ரகசிய சுரங்கங்கள் மற்றும் இருண்ட மண்டபங்களை பயன்படுத்தினார்கள். இந்த இடங்கள் பல வருடங்களாக யாரும் செல்லாமல் மிகவும் அமைதியாகவும் குளிர்ந்த நிலையிலும் இருக்கும். பாம்புகள் அடிப்படையில் குளிர் இரத்த பிராணிகள். 

தங்களது உடல் வெப்பநிலையை அவைகளால் தாமாகவே சீராக்க முடியாது. எனவே அதிக வெயில் அல்லது அதிக குளிரில் இருந்து தப்பிக்க இது போன்ற இருண்ட நிலத்தடி அறைகளைத் தேடி அவை பாதுகாப்பிற்காகச் செல்கின்றன. அங்கு தற்செயலாக புதையல்கள் இருப்பதே இந்த அனைத்து கதைகளுக்கும் மூல காரணம்.

இதையும் படியுங்கள்:
பாம்புகள் நாக்கை நீட்டுவதன் திடுக்கிடும் ரகசியம்... இது தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!
Snake guarding treasure myth

உணவு தேடும் பயணம்!

மனிதர்கள் நடமாட்டம் இல்லாத பழைய இடிபாடுகள் மற்றும் சுரங்கங்களில் எலிகள், பூச்சிகள் மற்றும் பல்லிகள் அதிக அளவில் வசிக்கும். பாம்புகளுக்கு எலிகள் தான் மிகவும் பிடித்தமான ஒரு உணவாகும். எனவே தங்களது இரையை தேடிச் செல்லும் பயணத்தில் பாம்புகள் இயல்பாகவே இந்த இடங்களை தங்களது இருப்பிடமாக மாற்றிக்கொள்கின்றன. உணவிற்காக வந்த பாம்புகளை, புதையலை காக்க வந்ததாக மக்கள் தவறாக புரிந்துகொண்டனர்.

மன்னர்களின் தந்திரம்!

வரலாற்று ஆய்வாளர்கள் இந்த விஷயத்தில் ஒரு சுவாரஸ்யமான பின்னணியைக் கூறுகிறார்கள். பழங்காலத்தில் வாழ்ந்த பெரும் செல்வந்தர்களும் மன்னர்களும், தங்களது ரகசிய புதையல்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற ஒரு மாஸ்டர் பிளான் போட்டனர். புதையல் இருக்கும் இடத்தில் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் இருப்பதாக ஒரு வதந்தியை திட்டமிட்டு பரப்பிவிட்டனர். சில நேரங்களில் பாதுகாப்பிற்காக உண்மையாகவே அந்த அறைகளில் விஷப் பாம்புகளை கொண்டு வந்து விட்டனர். இந்த தந்திரமே காலப்போக்கில் கட்டுக்கதைகளாக மாறி மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

இதையும் படியுங்கள்:
கார் அல்லது பைக்கில் பாம்பு புகுந்துவிட்டால் உடனே இதைச் செய்யுங்கள்.. உயிர் தப்பும் ரகசியம்!
Snake guarding treasure myth

பாம்புகள் எப்போதுமே தங்களது உணவு மற்றும் பாதுகாப்பான இருப்பிடத்தை மட்டுமே தேடிச் செல்கின்றன. அவற்றுக்கு விலைமதிப்பற்ற நகைகள் மீதோ வைரங்களின் மீதோ எந்த அக்கறையும் கிடையாது. இனிமேல் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளை பார்த்தால், அதன் பின்னால் உள்ள உண்மையான அறிவியல் காரணங்களை நினைத்துக்கொள்ளுங்கள். விலங்குகளின் இயல்பான குணங்களை புரிந்து கொண்டு இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com