மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய வரும் சோலார் ஃபிலிம்!

Solar films
Solar films

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்யும் சோலார் பிலிம்கள் விற்பனை அதிகரிப்பு.

தொழில்நுட்பங்களினுடைய அதி தீவிர வளர்ச்சி நாளுக்கு நாள் புத்துயிர் பெற்று வருகிறது. ஒட்டுமொத்த தொழில் நுட்பங்களுக்கும் மூல ஆதாரமாக இருப்பது மின்சாரம். மின்சாரம் பல்வேறு வகைகளில் இருந்து பெறப்பட்டாலும், மின்சார தட்டுப்பாடு என்பது நாளுக்கு நாள் உலகை ஆட்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக மாறத் தொடங்கி இருக்கிறது. பின் தங்கிய நாடுகளில் தினமும் பல மணி நேரங்கள் மின்சாரம் இல்லாத நிலை நிலவுகிறது. வளர்ந்து வரும் நாடான இந்தியாவிலும் மின்சார தட்டுப்பாடு என்பது முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. ஏன் இந்தியாவில் மின்சார பிரச்சனை ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்திய முக்கியமான ஒரு விஷயமாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மின்சார உற்பத்தியில் புதிய கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து வருகின்றன. இந்த நிலையில் ரோஸ்டன் நகரத்தை தலைமையிடமாக கொண்ட இயங்கும் ஹிளியோடெக் என்ற நிறுவனம் ஹைட்ரோ கார்பனை முக்கிய மூலப்பொருளாக கொண்டு ஃபிலிம் சோலாரை தயார் செய்துள்ளது. இதை தற்போது மிகப்பெரிய ஆலைகளும், தொழில் நிறுவனங்களும் அதிகம் பயன்படுத்த தொடங்கி இருக்கின்றன. இது சூரிய ஒளியில் இருந்து மின்சாரத்தை பெறும் தன்மை கொண்டது.

சோலார் ஃபிலிம் ஹைட்ரோ கார்பனை முதன்மையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஹைட்ரோ கார்பன் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்றாக இருப்பதால் இந்த நிறுவனம் தற்போது ஃபிலிமை அதிக அளவில் உற்பத்தி செய்ய தொடங்கி இருக்கிறது. மேலும் இதில் கரிம சோலார் செல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இது மட்டுமல்லாது இவை இலகுவானதாகவும், நெகிழும் தன்மை கொண்டதாக இருப்பதாலும் எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் கட்டிடங்களின் மேற்கூறையில் மட்டும் அல்லாது ஜன்னல்கள், கதவுகள், சுவருகளில் ஒட்டி பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. மேலும் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்துச் சென்று இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும் இதை எளிதாக இருப்பதால் சில்லறை விற்பனையகங்களிலும் சோலார் ஃபிலிம் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com