stars
Some interesting facts about stars!

நட்சத்திரங்கள்: பிரபஞ்சத்தின் பொக்கிஷம்! 

Published on

இரவு நேரத்தில் வானில் தெரியும் ஒவ்வொரு நட்சத்திரமும் இந்தப் பிரபஞ்சத்தின் கதையை சொல்கிறது. அவை இந்த பிரபஞ்சத்தில் பிறந்து, வளர்ந்து, இறுதியில் அழிந்து போகின்றன. இந்த பிரகாசமான பொருட்கள் பற்றிய ஆய்வு மனிதகுலத்தின் அறிவியல் ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இந்தப் பதிவில் நட்சத்திரங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்களைப் பார்க்கலாம். 

நட்சத்திரங்களின் பிறப்பு: ஒரு நட்சத்திரம் எப்படி பிறக்கிறது என்பது பற்றிய கேள்வி பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தி வருகிறது. ஒரு பெரிய மூலக்கூறு மேகம், ஈர்ப்பு விசையின் காரணமாக சுருங்கத் தொடங்கும்போது, ஒரு நட்சத்திரம் பிறக்கிறது. இந்தச் சுருக்கம் மேகத்தின் மையப் பகுதியில் வெப்பத்தை அதிகரிக்க செய்கிறது. இது போதுமான வெப்பத்தை அடைந்ததும் அணுக்கரு இணைவு (Nuclear Fusion) என்னும் செயல்முறை தொடங்குகிறது. இதன் மூலமாக ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியம் அணுக்களாக மாறுகின்றன. இந்த செயல் முறையில் வெளியாகும் ஆற்றல் நட்சத்திரத்தை பிரகாசிக்க வைக்கிறது. 

வாழ்க்கை: ஒரு நட்சத்திரத்தின் வாழ்க்கை அதன் நிறை மற்றும் அளவைப் பொறுத்து மாறுபடும். நிறை அதிகம் உள்ள நட்சத்திரங்கள் குறைந்த நிறை கொண்ட நட்சத்திரங்களை விட வேகமாக எரிந்து அழிந்து போகும். ஒரு நட்சத்திரம் தனது மையத்தில் உள்ள ஹைட்ரஜனை முழுமையாக எரித்து முடித்த பிறகு, ஒரு சிவப்பு ராட்சத நட்சத்திரமாக மாறும். பின்னர் நட்சத்திரத்தின் நிறையைப் பொறுத்து அது ஒரு வெள்ளை குள்ள நட்சத்திரமாகவோ, நியூட்ரான் நட்சத்திரமாகவோ அல்லது ஒரு கருந்துளையாகவோ மாறலாம்.  

இறப்பு: ஒரு நட்சத்திரத்தின் இறக்கும் தருணம் என்பது அதன் வாழ்க்கையில் மிகவும் மோசமான கட்டமாகும். சூப்பர் நோவா (Supernova) எனப்படும் பெருவெடிப்பில் நட்சத்திரம் இறக்கும்போது, அது தனது வாழ்நாளில் உற்பத்தி செய்த அனைத்து தனிமங்களையும் விண்வெளியில் பரப்புகிறது. இந்தத் தனிமங்கள் புதிய நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை உருவாக்கப் பயன்படுகின்றன. 

இதையும் படியுங்கள்:
The Circular Economy: நமது எதிர்காலத்திற்கான ஒரு முதலீடு! என்னனு தெரிஞ்சுக்கலாமா மக்களே?
stars

நட்சத்திரங்கள் நமது பிரபஞ்சத்தில் மிகவும் முக்கியமான பங்கை வகிக்கின்றன. அவை ஒளி, வெப்பம், ஆற்றலை வழங்கி, புதிய தனிமங்களை உருவாக்கி புதிய நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களை உருவாக்கும் செயல்முறையில் ஈடுபடுகின்றன. நட்சத்திரங்கள் பற்றிய ஆய்வு நமது பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய உண்மைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவும். 

எனவே, விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திரங்களை பற்றி தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் நாம் நட்சத்திரங்கள் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களை கண்டறிய முடியும். 

logo
Kalki Online
kalkionline.com