கூகுளில் லட்சக்கணக்கில் சம்பாதிக்க சில டிப்ஸ்!

Google
Google
Published on

உங்கள் அனைவருக்குமே கூகுள் தேடுபொறி பற்றி நன்கு தெரிந்திருக்கும். இதில் நாம் எதைத் தேடினாலும் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். கூகுளைப் பயன்படுத்தி நாம் பல வேலைகளைச் செய்யலாம் என்பது நமக்குத் தெரியும். ஆனால், இந்த கூகுளைப் பயன்படுத்தி நாம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கூகுளில் கட்டுரைகள் எழுதி வெளியிடுவதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பணம் சம்பாதிக்கலாம். இதற்கு நீங்கள் அதிக முதலீடு செய்ய வேண்டியதில்லை. இந்தப் பதிவில் கூகுளில் கட்டுரை எழுதி எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்பது பற்றி பார்க்கலாம்.‌

1. இணையதளம் உருவாக்குதல்:

மாதம் 1000 ரூபாய்க்குள் நீங்கள் ஒரு டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் வாங்கலாம். டொமைன் பெயர் என்பது உங்கள் இணையதளத்தின் முகவரி போன்றது. ஹோஸ்டிங் என்பது உங்கள் இணையதளத்தை இணையத்தில் சேமித்து வைக்கும் இடம்.

டொமைன் பெயர் மற்றும் ஹோஸ்டிங் வாங்கிய பிறகு, நீங்கள் ஒரு வலைத்தளத்தை உருவாக்க வேண்டும். இதற்கு நீங்கள் WordPress போன்ற இலவச தளங்களைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வலைத்தளத்தில் நீங்கள் எழுதும் கட்டுரைகளே உங்கள் வருமானத்திற்கு அடிப்படை. எனவே, உங்கள் கட்டுரைகள் தரமானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.

2. Google Adsense கணக்கு உருவாக்குதல்:

Google Adsense என்பது கூகுள் வழங்கும் ஒரு விளம்பரத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் விளம்பரங்களை காட்டி பணம் சம்பாதிக்கலாம்.

உங்கள் வலைத்தளம் தயாரான பிறகு, நீங்கள் Google Adsense கணக்கை உருவாக்கி, உங்கள் வலைத்தளத்தை சமர்ப்பிக்க வேண்டும். கூகுள் உங்கள் வலைத்தளத்தை சரிபார்த்த பிறகு, உங்கள் வலைத்தளத்தில் விளம்பரங்கள் காட்டப்படும்.

3. கட்டுரைகள் எழுதுதல் மற்றும் மேம்படுத்துதல்

உங்கள் வலைத்தளத்தில் தொடர்ச்சியாக புதிய கட்டுரைகளை எழுதி வெளியிட வேண்டும். Search Engine Optimization அல்லது SEO என்பது உங்கள் கட்டுரைகளை கூகுள் தேடலில் மேலே காட்ட உதவும் ஒரு செயல்முறையாகும். SEO-ஐப் பயன்படுத்தி உங்கள் கட்டுரைகளை மேம்படுத்தினால், உங்கள் வலைத்தளத்திற்கு அதிகமான பார்வையாளர்கள் வருவார்கள்.

உங்கள் கட்டுரைகள் சுவாரஸ்யமாகவும், பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும். இதன் மூலம் பார்வையாளர்கள் உங்கள் வலைத்தளத்திற்கு மீண்டும் மீண்டும் வருவார்கள்.

இதையும் படியுங்கள்:
இலக்கை நோக்கிய பயணம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா?
Google
  • நீங்கள் எழுதும் தலைப்புகள்: தொழில்நுட்பம், பயணம், உணவு, ஆரோக்கியம் போன்ற பல தலைப்புகளில் நீங்கள் கட்டுரைகள் எழுதலாம்.

  • சமூக ஊடகங்கள்: உங்கள் கட்டுரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து, உங்கள் வலைத்தளத்திற்கு அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கலாம்.

  • பிற வலைப்பதிவர்களுடன் இணைந்து செயல்படுங்கள்: பிற வலைப்பதிவர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் உங்கள் வலைத்தளத்திற்கு அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கலாம்.

இன்றைய காலத்தில் கூகுள் மூலம் பணம் சம்பாதிப்பது ஒரு நல்ல வாய்ப்பு. ஆனால், இதற்கு தொடர்ச்சியான முயற்சி தேவை. நீங்கள் திறமையாகவும், அதிகம் உழைக்கக் கூடியவராகவும் இருந்தால், கூகுள் மூலம் நீங்கள் நிச்சயமாக லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம். இந்த பதிவில் கட்டுரை எழுதி கூகுளில் பணம் சம்பாதிப்பது பற்றிய கருத்துக்களை மேலோட்டமாக மட்டுமே கூறியுள்ளேன். இதைப்பற்றி இணைக்கில் ஆழமாகத் தேடிப் பார்த்து, நீங்களும் பணம் சம்பாதிக்க முயற்சிக்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com