பயனர்களை அச்சுறுத்தும் Spam மெயில்கள். புதிய அம்சம் அறிமுகம்! 

Spam Mail.
Spam Mail.

ஸ்பேம் ஈமெயில்களில் இருந்து பயனர்களை காக்கும் விதமாக ஜிமெயில் யூசர்களுக்கு செக்யூரிட்டி அப்டேட் கிடைத்துள்ளது. 

பலகாலமாகவே ஜிமெயில் பயனர்கள் சந்தித்து வரும் மிகப் பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ஸ்பேம் மெயில்கள்தான். பயனர்களின் இன்பாக்ஸுக்கு வரும் போலியான மெயில்களை குறைக்கும் முயற்சியில் ஜிமெயில் வேலை செய்து வருகிறது. இதற்காக அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் ஸ்பேம் மெயில்களை கண்டறிவதில் 38 சதவீதம் சிறப்பாக செயல்படுகிறது என்பது தெரிகிறது. 

ஆனால் இது எந்த அளவுக்கு பயன்ர்களுக்கு ஸ்பேம் மெயில்களை கண்டுபிடித்து நீக்க உதவும் என கேள்வியும் எழுந்துள்ளது. இதற்காக ஸ்பேமர்கள் பயன்படுத்தும் கீவர்டுகளை கண்டுபிடிக்க புதிய வழிமுறைகளை கூகுள் உருவாக்கி வருகிறது. இதன் மூலமாக ஸ்பேமர்களின் ஈமெயில்களை படித்து கண்டுபிடிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்தை அவர்கள் உருவாக்கி வருகின்றனர். இந்த தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் யுக்திகளை கண்டுபிடித்து, அதை சரியாக வடிகட்டி நீக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில வருடங்களாகவே இதை தீவிரமாக பரிசோதித்து வரும் கூகுள், ஆண்ட்ராய்டு டிராக்கிங், வெப் மற்றும் பிற அம்சங்களில் வேலை செய்யும் என குறிப்பிட்டுள்ளது. இப்படி ஸ்பேம் மெயில்களுக்கு முற்று வைக்கும் வகையில் பல வழிகளைக் கண்டறிந்து வரும் அந்நிறுவனம், ஜிமெயில் அப்ளிகேஷனில் Unsubscribe பட்டனை அறிமுகம் செய்வது மூலமாக பயனர்களே ஸ்பேமர்களை நேரடியாக தடுக்கும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. 

இதையும் படியுங்கள்:
புதிய அம்சம் அறிமுகம். ஜிமெயில் பயனர்கள் மகிழ்ச்சி.
Spam Mail.

இந்த அம்சம் தற்போது அனைவருக்கும் கிடைக்கவில்லை. குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. மேலும் iOS பயனர்களுக்கு எப்போது கிடைக்கும் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. இது எல்லா பயனர்களின் பயன்பாட்டிற்கு வந்ததும் ஸ்பேம் மெயில்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துவிடும் என்கின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com