ஸ்டார்லிங்க்: அதில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

Starlink
Starlink
Published on

இன்றைய தலைமுறையினர் ஆவலாகக் காத்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் ஸ்டார்லிங்க் (Starlink) என்ற இணையதள சேவைக்காகத்தான். அப்படி என்ன விசேஷம் அதில் உள்ளது?

ஸ்டார்லிங்க்கின் ஆரம்பம்:

போதுமான இணையதள சேவைகள் உலகெங்கும் இருந்தபோதிலும் எலோன் மஸ்க் இந்த ஸ்டார்லிங் (Starlink) மூலம் தனித்துவமான இணையதள சேவையை வழங்குகிறார். முற்றிலும் கேபிள்கள், கோபுரங்கள்(Towers) இணைப்பு இல்லாமல், அதோடு, எந்த ஒரு புவியியல் பிரச்னையையும் (Geography) எதிர்கொள்ளும்படியாக இதை உருவாக்கியுள்ளனர். அதன்படி 2015இல் இதற்கான வேலைகள் தொடங்கப்பட்டு, 2019 முதல் இதற்குத் தேவையான செயற்கைக்கோள்களை ஏவத் தொடங்கினார்கள். தற்போது 7,600க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களைப் பூமியின் குறைந்த சுற்றுப்பாதையில் சுற்றவிட்டு (low Earth orbit) இணையதளச் சேவையை உலகெங்கும் பல நாடுகளுக்குத் தருகிறார்கள்.

ஸ்டார்லிங்க் எவ்வாறு வேலை செய்கிறது?

நாம் குடியிருக்கும் இடத்தின் மாடி பகுதியில் ஸ்டார்லிங்க் டிஷ் ஆண்டனாவை (dish antenna) நிறுவ வேண்டும். இந்த ஆண்டனா பூமிக்கு மேலே கடந்து செல்லும் செயற்கைக்கோளின் திசைக்கேற்ப அதன் திசையை மாற்றிக்கொள்ளும் வல்லமை வாய்ந்தது. மேலே சுற்றும் அந்த செயற்கைக்கோள்கள் மூலம்தான் நம்மால் தடையற்ற இணையதள சேவையைப் பெற முடியும். அது இமயமலையிலோ, கடலின் நடுவிலோ அல்லது மோசமான வானிலையாக இருந்தாலும் சரி; நாம் விரும்பும் அதிவேக இணையதளம் தடைபடாது.

இந்தியாவில் ஸ்டார்லிங்கின் பங்கு என்ன?

தற்போது இந்தியாவில் உள்ள ஜியோ, ஏர்டெல் ஃபைபர் போன்ற இணைய சேவைகள் நகரங்களில் முடிந்தவரை தடையற்ற இணைய சேவையைத் தருகிறார்கள். ஆனால், அவர்களால் சில மலை கிராமப்புறப் பகுதிகளில் இப்போதும்கூட சிறப்பான சேவையைத் தர முடிவதில்லை.

இதையும் படியுங்கள்:
இதனால்தான் நான் கேப்டன்ஸி வேண்டாம் என்று கூறிவிட்டேன் – பும்ரா!
Starlink

இந்தப் பகுதிகளைத்தான் ஸ்டார்லிங்க் முதலில் பூர்த்தி செய்யும். இதன் நேரடி செயற்கைக்கோள் தொடர்பு (Direct satellite connection) லடாக், லட்சத்தீவு அல்லது எந்த ஒரு மலைப் பிரதேசமாக இருந்தாலும் ஸ்டார்லிங்கால் இணைய சேவையைத் தர முடியும்.

அதிக விலை:

மற்ற நிறுவனங்களை ஒப்பிடும்போது இதனை நிறுவுவதற்கான செலவு (installation) சுமார் ₹33,000மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணம் சற்று அதிகம் என்றாலும். இதுவரை இணையதள சேவையே பார்க்காத அல்லது கிடைக்கச் சிரமப்பட்ட தொலைதூரப் பள்ளிகள், மருத்துவமனைகள், பேரிடர் நிகழும் மண்டலங்களுக்கு இந்த ஸ்டார்லிங்கால் உலகிற்கான தொடர்பை அவர்களுக்கு உண்டாக்கித் தரமுடியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com