மலைகளைக் காக்கும் எஃகு கழிவுகள்: இரும்பு ஆலை கழிவிலிருந்து உருவகம் பெறும் புதுயுகச் சாலைகள்!

Eco friendly construction - எஃகு கழிவுகள்
Eco friendly construction - எஃகு கழிவுகள்AI Image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

இரும்பு ஆலை கழிவிலிருந்து சாலை அமைப்பது மற்றும் கட்டுமான பொருட்களை தயாரிப்பது ஒரு சிறந்த சுற்றுச்சூழல் நட்பு தொழில்நுட்பமாகும். இது இயற்கை வளங்களை பாதுகாப்பதுடன் கட்டுமான செலவையும் குறைக்கிறது. இரும்பு ஆலைகளில் உருவாகும் எஃகு கழிவுகள் (Steel Slag) நவீன தொழில்நுட்பங்கள் மூலம் மறுசுழற்சி செய்து, தரமான சாலைகள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இது சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, இயற்கை மணல் மற்றும் பாறைகளுக்கான தேவையை வெகுவாகக் குறைக்கிறது.

1) ஸ்லாக் (Slag) கற்கள்:

இரும்பு ஆலை கழிவில் உள்ள உறுதியான துகள்கள், சக்தி வாய்ந்த காந்தங்கள் மூலம் இரும்புத்தாது பிரிக்கப்பட்டு பயன்படுத்தப் படுகின்றன. இந்த இரும்புக் கழிவு மணல் சாலைகளின் அடித்தளம் (Road base) மற்றும் மேலடுக்குகளில் பயன்படுத்தப்படும் பொழுது, போக்குவரத்து அழுத்தத்தைத் தாங்கும் வலிமையை சாலைகளுக்கு வழங்குகிறது.

இரும்பாலைக் கழிவுகள் மற்றும் சாம்பல் கலவைப் பயன்பாடு சாலைகளின் ஆயுளை 25% வரை நீட்டிக்கிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்கள் இந்த முறையைப் பயன்படுத்தி முன்னோடி சாலைகளை உருவாக்கியுள்ளன.

இரும்புக் கழிவுகள் சாதாரண ஜல்லிக்கற்களை விட அதிக எடையும் கடினத்தன்மையும் கொண்டவை. இந்தக் கழிவுகளைக்கொண்டு அமைக்கப்படும் சாலைகள் கனரக வாகனங்களின் எடையைத் தாங்கும் மற்றும் எளிதில் பழுதடையாது. இந்தியாவின் முதல் ஸ்டீல் ஸ்லாக் சாலை (Steel Slag Road) சூரத் நகரில் வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பாறைகளை உடைத்து ஜல்லி எடுப்பதற்கான செலவை விட இது 30% வரை குறைவானது.

Eco friendly construction - எஃகு கழிவுகள்
Eco friendly construction - எஃகு கழிவுகள்AI Image

சாலைகள் போடுவதற்கு தேவைப்படும் கருங்கற்கள் மற்றும் மணலுக்கு பதிலாக இரும்புக் கழிவுகள் பயன்படுத்தப்படுவதால் மலைகள் வெட்டப்படுவது குறைகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் பள்ளங்களை சரி செய்யவும், சாலைகளை பராமரிக்கவும் எஃகு கழிவுகளை அடிப்படையாகக் கொண்ட புதிய தொழில்நுட்பங்கள் தற்போது இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

2) கட்டுமான பொருட்கள் தயாரிப்பு:

*ஸ்லாக் சிமெண்ட் (Slag Cement):

இரும்புக் கழிவை பொடியாக்கி சாதாரண சிமெண்டுடன் கலந்து

'போர்ட்லேண்ட் ஸ்லாக் சிமெண்ட்'(PSC) தயாரிக்கப்படுகிறது. இது கடலோர கட்டுமானங்களுக்கு மிகவும் சிறந்தது.

*கட்டுமான செங்கற்கள்:

இரும்புக் கழிவு மற்றும் சாம்பல் (fly ash) கலந்து உறுதியான செங்கற்கள் மற்றும் பேவர் பிளாக்குகள் (Paver Blocks) தயாரிக்கப்படுகின்றன.

இரும்புக் கழிவு மணல் தூளாக்கப்பட்டு, காந்தங்கள் மூலம் இரும்புத் துகள்கள் பிரிக்கப்படுகின்றன. எஞ்சியிருக்கும் மணல் கட்டுமானப் பூச்சு மணலாகப் பயன்படுகிறது.

எஃகு கழிவுகளில் உள்ள சுண்ணாம்பு மற்றும் சிலிகான் தாதுக்கள் செங்கற்கள் மற்றும் ஓடுகள் தயாரிக்க பயன்படுகின்றன. இது பாரம்பரிய செங்கற்களைப் போலவே வலுவாக இருக்கும். எஃகு ஆலைகளில் உருவாகும் 'ஸ்லாக்' எனப்படும் கழிவுகள் சிமெண்ட் தயாரிப்பு ஆலைகளுக்கு மூலப்பொருளாக விற்கப்படுகின்றன.

*கான்கிரீட் ஜல்லி:

கட்டிடங்களின் அஸ்திவாரம் மற்றும் தூண்களுக்குத் தேவையான கான்கிரீட் கலவையில் இயற்கை ஜல்லிக்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம். இரும்பு ஆலைக் கழிவுகளில் இருக்கும் கடினத்தன்மை காரணமாக அதிலிருந்து உறுதியான கட்டுமான கற்கள், ஓடுகள் மற்றும் பீங்கான் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

3) சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நன்மைகள்:

கழிவுகள் நிலத்தில் கொட்டப்படுவது தடுக்கப்படுவதால் மண்வளம் மற்றும் நிலத்தடி நீர் மாசுபடுவது குறைகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.

கட்டுமானப் பொருட்களுக்கு இத்தகைய மாற்றுப் பொருட்கள் பயன்படுவதால் கட்டடங்களின் கட்டுமானச் செலவும் குறைகிறது.

கடலில் கொட்டப்படும் கழிவுகள் குறைக்கப்பட்டு, இயற்கை மணல் மற்றும் கருங்கற்கள் வெட்டி எடுக்கப் படுவதும் தடுக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
பூமிக்கு அடியில் கொதிக்கும் நெருப்புத் திரவம்: எரிமலைகள் உருவாகும் உண்மையான காரணம் என்ன?
Eco friendly construction - எஃகு கழிவுகள்

இரும்பாலைக் கழிவுகளில் அதிக பளுவைத் தாங்கும் தன்மை உள்ளதால் சாலைகள் மற்றும் கட்டிடங்களின் ஆயுட்காலம் அதிகரிக்கிறது.

இந்த நவீன பசுமைத் தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம், நமது இயற்கை வளங்களான மலைகளையும் மணலையும் அழிக்காமல், அதே நேரத்தில் மிகக் குறைந்த செலவில் 25% கூடுதல் ஆயுள் கொண்ட மிக வலிமையான சாலைகளையும் தரமான வீடுகளையும் எவ்வாறு உருவாக்க முடியும் என்ற மாற்றுப் பொருளாதாரப் புரிதலையும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வையும் நீங்கள் முழுமையாகப் பெறுகிறீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com