

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கைப்பேசியும், அதன் தொழில்நுட்ப வளர்ச்சியையும் நன்றாக உபயோகித்துக்கொள்ள கற்றுக் கொண்டுள்ளனர். எந்த ஒரு விஷயமும் ஒருவர் மூலம் பிரபலமடைந்துவிட்டால், சமூக வலைதளங்களில் அவை வேகமாக பரவி அனைவரையும் அது ஆட்கொண்டு விடுகிறது. அப்படி உருவானதுதான் கிப்லி.
சியாட்டிலைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான. கிராண்ட் ஸ்லாட்டன், கிப்ளி ஃபைட் செயற்கை நுண்ணறிவில் புகைப்படத்தை சரி செய்வதை (எடிட் செய்வதை), பிரபலப்படுத்தினார். கிப்லி படங்களில் கார்ட்டூன் எனப்படும் கேலிச் சித்திரங்கள்போல உருவகேலி இருக்காது.
கார்ட்டூன் வரைந்தவர் கார்ட்டூனிஸ்டாக இருப்பார். வரையப்பட்டிருப்பவர் வேறு ஒருவராக இருப்பார். ஆனால் கிப்லி வரைவு முறை தாம் விரும்பும் வண்ணம் உருவங்களை உருவாக்கிட உதவுகிறது. பல புனைவு கதாபாத்திரங்களை உருவாக்கவும் கிப்லி வரைவுமுறை உதவுகிறது.
தாம் விரும்பும் உருவங்களை போல கிடைப்பதால் கிப்லி மூலம் தங்கள் புகைப்பட பதிப்பை பலரும் பெரிதும் விரும்புகிறார்கள்.
சாட் ஜிபிடி. ஐ பயன்படுத்தி கிப்லி பாணி செயற்கை நுண்ணறிவு படங்களை உருவாக்கலாம். வலைதளம் அல்லது செயலியை திறந்து, கீழ் இடது மூலையில் உள்ள +அடையாளத்தை கிளிக் செய்து பதிவேற்றம் செய்து Ghiblify this என்று ஆணையிட்டால் பதிவேற்றம் செய்த படத்தின் கிப்லி பதிப்பு கிடைக்கும். இதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கிப்லியின் ரிஷிமூலம் ஸ்டுடியோ கிப்லி ஆகும். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஸ்டுடியோ கிப்லி 1985ல் ஹயாவ் மியாஸாகி இசாவோ தகாஹாட்டா என்ற இருவரால் அனிமேஷன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாக தொடங்கப்பட்டது.
சிறார், பெரியோர் என அனைவரையும் கவர்ந்த ஸ்பிரிட்டட் அவே, மை நெய்பர், ஹௌல்ஸ் மூவிங் கேஸில். போன்ற அனிமேஷன் திரைப்படங்கள் ஸ்டுடியோ கிப்லியில்தான் உருவானது.
அனிமேஷன் படங்களிலிருந்து வித்தியாசமாக இருப்பதால் இவை சின்னத்திரை, பெரிய திரை, குறும்படங்களிலும் பிரபலமாக உள்ளது.