தங்களின் AI தொழில்நுட்பம் பற்றி தரமான அப்டேட்டை வெளியிட்ட சுந்தர் பிச்சை.

தங்களின் AI தொழில்நுட்பம் பற்றி தரமான அப்டேட்டை வெளியிட்ட சுந்தர் பிச்சை.
Published on

புதிய AI தொழில்நுட்பமான ChatGPT அடுத்த சில மாதங்களில் கூகுளேயே பின்னுக்கு தள்ளிவிடும் என நினைக்கப்பட்ட நேரத்தில், "நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு" என்ற பாணியில், கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை அட்டகாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Bing Search-ல் ChatGPT பயன்படுத்துவதற்கான அம்சம் கிடைப்பது போல், Google Search-க்கும் AI ஆதரவு கிடைக்கும் என சுந்தர் பிச்சை உறுதியளித்துள்ளார். இந்த புதிய அப்டேட் ChatGPT-ன் வளர்ச்சியைத் தடுக்குமா எனக் கேட்டால், வாய்ப்பில்ல ராஜா என்பதை வெளிப்படையாகக் கூறிவிடலாம். ஏனென்றால் மைக்ரோசாப்ட் சர்ச் பாரில் கிடைக்கும் ChatGPT வெறும் உரையாடல்களுக்கு பயன்படுவது மட்டுமின்றி, AI புகைப்பட உருவாக்கத்தையும் ஆதரிக்கிறது. மறுபுறம் இதற்கு எதிராக கூகுள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Bard AI Chatbot ஆனது மக்கள் மத்தியில் குறைந்த நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறது. 

இந்த நிலைமையை மாற்ற கூகுள் அதன் AI தொழில்நுட்பத்தின் துல்லியத்தன்மையை முறையாக பதிலளிக்கக்கூடிய வகையில் மாற்ற வேண்டும். இதற்காக கூகுள் நிறுவனமானது தனது லாங்குவேஜ் மாடல்களை மேம்படுத்த வேண்டும். அது தொடர்பான பணிகள் தற்போது நடந்து வரும் வேளையில் சுந்தர் பிச்சையின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த முடிவு OpenAi நிறுவனத்திற்கு பதிலடியாக இருக்கும் என்றும், பல வகையான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் கூகுள் தேடுபொறியின் திறன்  மேம்படுத்தப் படும் என்றும், சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

LLMs எனப்படும் லார்ஜ் லாங்குவேஜ் மாடல் என்பது, கேட்கும் கேள்விகளுக்கு  மனிதர்கள் உரையாடுவது போலவே பதிலளிக்க  உருவாக்கப்பட்ட கணினி நிரல் மொழியாகும். இந்த விஷயத்தில் ஏற்கனவே கூகுள் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. தற்போது கூகுள் தேடுபொறியில் சேர்க்கப்படவிருக்கும் AI ஆதரவானது, LLMs உடன் இணைக்கப்பட்ட யூசர் எக்ஸ்பீரியன்சை வழங்கும். மக்கள் ChatGPT-ஐ பயன்படுத்துவது போலவே, கூகுள் சர்ச் பேக்ரவுண்டில் தேவையான கேள்விகளைக் கேட்டு பதில் பெற முடியுமென்கிறார் சுந்தர் பிச்சை. 

மேலும், கூகுள் வெளியிட்ட Bard சாட்பாட் பெரிய அளவிலான வரவேற்பை பெறவில்லை என்றும், அதிக எண்ணிக்கையில் பயனர்களின் கவனத்தையும் உற்சாகத்தையும் ஈர்க்வில்லை எனவும் சுந்தர் பிச்சை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். 

கூகுள் நிறுவனம் தனது தேடுபொறியில் AI தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பது, பயனர் அனுபவத்தை மேம்படுத்துவது, ChatGPT-க்கு எதிராக போட்டியிடும் விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, இனி எதிர்காலத்தில் எல்லாமே செயற்கை நுண்ணறிவு தான் என்பதை சொல்லாமல் சொல்கிறது எனலாம். 

இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் இந்த உலகை எப்படி மாற்றுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com