கூகுள் பார்ட் Ai தொழில்நுட்பத்தில் 'ப்ரிசைஸ் லொகேஷன் சப்போர்ட்' எனப்படும், ஒரு இருப்பிடத்தை மிகவும் துல்லியமான முறையில் கண்டறியும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் பொருத்தமான பதில்களை Bard AI கருவியால் வழங்க முடியும். மேலும் இது உள்ளூர் சார்ந்த தேடல் முடிவுகளையும் சிறப்பாக வழங்கும் என சொல்லப் படுகிறது. உடனே இதனால் மக்களுடைய பிரைவசி போய்விடுமோ என்ற அச்சம் வேண்டாம். இது ஒவ்வொரு பயனரின் தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே அமைத்துக்கொள்ளும் படியாக உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் கூகுள் பார்டு தளத்திற்குச் செல்லும்போது, "சிறந்த பதில்களைப் பெற உங்கள் டிவைஸின் ப்ரீசைஸ் லொகேஷனைப் பயன்படுத்துவதற்கு பார்டை அனுமதிக்கவும்" என்ற பாப்அப் காட்டப்படும். அதை பயனர்கள் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான், அவர்களின் அருகிலுள்ள உணவகங்கள், அவர்கள் இருக்கும் பகுதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் மிகவும் துல்லியமாக அவர்களால் அணுக முடியும் என கூகுள் கூறியுள்ளது.
இந்த அம்சத்தை ஒருவர் நம்பி பயன்படுத்தலாம். ஏனென்றால் லோக்கல் சர்ச் என்பது உள்ளூரில் இருக்கும் அனைத்து விதமான அம்சத்தையும் அறிந்துகொள்ளும் மிகப்பெரிய சக்தி ஆகும். உள்ளூரில் இருக்கும் மோசமான இடங்கள் மற்றும் உணவகங்கள் போன்றவற்றில் ஒருவர் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, இந்த அம்சம் உதவியாக இருக்கும்.
உதாரணத்திற்கு இந்த ஊரில் சுற்றிப் பார்க்க சிறந்த இடங்கள், சிறந்த உணவகங்கள், சிறந்த மருத்துவ மனைகள் போன்றவற்றை தேடுவதற்கு கூகுள் பார்டைப் பயன்படுத்தினால், அது உங்களுக்கு சிறப்பான பரிந்துரைகளை ஸ்டார் ரேட்டிங் அடிப்படையில் வழங்கும். இதனால் பயனர்களுக்கும் நல்லது, உள்ளூரில் சிறந்த கடை எது என்பதையும் ஒருவர் அறிந்துகொள்ள முடியும்.
இதுபோன்ற நல்ல காரணங்களாலேயே ப்ரிசைஸ் லொகேஷன் சப்போர்ட் அம்சமானது கூகுள் பார்டுக்குக் கிடைத்துள்ள முக்கியமான அப்டேட் என சொல்லப் படுகிறது. ஆனால் இது தற்போது பீட்டா சோதனை அடிப்படையில்தான் இருக்கிறது. அனைத்து பயனர்களும் பயன்படுத்தும் வகையில் முறையாக வெளியிடப்பட்டால், மக்கள் மத்தியில் இது அதிக வரவேற்பைப் பெறும் என கூகுள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், கூகுள் பார்ட் Ai தொழில்நுட்பம், ChatGPT-ஐ விட ஒரு படி முன்னேறி சென்றுவிட்டது என சொல்லலாம்.