Mars கிரகத்தில் சூரிய அஸ்தமனம்!

Mars கிரகத்தில் சூரிய அஸ்தமனம்!

ன்ஜெனியூட்டி மார்ஸ்  ஹெலிகாப்டர் தன்னுடைய 45 ஆவது பயணத்தின் போது, மார்ஸ் கிரகத்தின் அழகிய சூரிய அஸ்தமனத்தைப் புகைப்படம் எடுத்துள்ளது. 

நாசாவின் இன்ஜினியூட்டி விமானம் மார்சை பல விதங்களில் புகைப்படம் எடுத்து, தரவுகளை சேகரித்து வருகிறது. முதல்முறையாக ஏப்ரல் 2021 இல் அது தன் பயணத்தைத் தொடங்கியது. பின்னர் அதன் சோதனை ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதற்காக மட்டுமே சில முறைகள் இயக்கப்பட்டு வந்தது. நாசாவின் எதிர்பார்ப்புகளையும் மீறி இந்த ஹெலிகாப்டர் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாக, இதுவரை 46 முறை ஆராய்ச்சி பணிக்காக இயக்கப்பட்டுள்ளது. 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழும் சூழலைக் கண்டுபிடிக்க பல மாதிரிகளை சேகரித்து வரும் இந்த பறக்கும் விமானம், இதுவரை மார்ஸ் கிரகத்தில் 10 கிலோ மீட்டர் தூரம் வரை  பயணித்துள்ளது. இதை எதிர்காலத்தில் பூமிக்கு திரும்ப கொண்டுவரும் நோக்கிலும் நாசா விஞ்ஞானிகள் செயல்பட்டு வருகிறார்கள். 

45 மற்றும் 46வது பயணத்தை இந்த விமானம் மூன்று நாட்கள் இடைவெளியில் கடந்த பிப்ரவரி 22 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தொடங்கியது. 47 வது பயணத்தை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமி மற்றும் செவ்வாய் கிரகத்தின் ஒப்பீடு நிலைகளைப் பொருத்து, இரண்டு கிரகங்களுக்கும் இடையேயான இந்த புகைப்படப் பரிமாற்றம், 5 முதல் 20 நிமிடங்கள் வரை எடுக்கும். இதற்கு ஏற்றவாறு இந்த விமானம் தானாக புறப்படவும், பறக்கவும், தரையிறங்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இவ்விமானத்தின் அடிப்பகுதியில் 22 டிகிரி கோணத்தில் ஹை ரெசல்யூஷன் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. விமானம் தரைக்கு நெருங்கிப் பறக்கும் போது, செவ்வாய் கிரகத்தின் புவியியல் அம்சங்களை அறிந்து, படம் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தரையிறங்கும் போது மட்டும் விமானம் கவனமாக செயல்படும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த எடையே 1.8 கிலோ தான்.  

தனது 45 ஆவது பயணத்தின்போது, இந்த விமானம் எடுத்த புகைப்படமானது, மலை உச்சியில் சூரிய அஸ்தமனம் நடப்பது போன்று பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. புகைப்படத்தில் காணப்படும் சூரியக் கதிர்கள் பள்ளத்தாக்கின் உள்ளே மணல்கள் மற்றும் பாறைகளை ஒளிரச்செய்து, பூமியிலுள்ள பாலைவனத்தில் எடுத்த புகைப்படம் போல உணரச் செய்கிறது. 

இதேபோல் பல கிரகங்களில் எடுக்கப்பட்ட சூரிய அஸ்தமனப் புகைப்படங்களை ஒப்பீடு செய்தால், சூரியனைச் சுற்றியுள்ள பல கிரகங்களில் உயிர் வாழும் சாத்தியக்கூறுகளை அறியலாம் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 

இவை அனைத்தும் செவ்வாய் கிரகத்தின் வாழ்க்கை முறைக்கான புரிதலை அறியச் செய்து, எதிர்காலத்தில் மனித குலம் இவற்றை நேரில் காண வழிவகுக்கும் என எதிர்பார்க்கலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com