புது அம்சங்களை அள்ளிக் கொடுத்த YouTube… நீங்க எதிர்பார்க்கும் அத்தனையும் இருக்கு! 

Youtube
Youtube
Published on

உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், தனது பயனர்களுக்கு புதிய அள்ளிக் கொடுத்துள்ளது. இம்முறை, பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், 20-க்கும் மேற்பட்ட புதுப்பிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ஸ்லீப் டைமர், மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பிளேலிஸ்ட்டை உருவாக்கும் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஸ்லீப் டைமர்: வீடியோக்களை நிறுத்துவதற்கான புதிய வழி - பலரும் வீடியோக்களைக் காணும்போது தூங்கிவிடுவதுண்டு. இதற்குத் தீர்வாக, யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்லீப் டைமர் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம், வீடியோவை இயக்கிய பிறகு, எத்தனை நிமிடங்களில் தானாக நின்றுவிட வேண்டும் என்பதை நாம் முன்பே நிர்ணயிக்கலாம். இது, மொபைல், டேப்லெட் மற்றும் டிவி என அனைத்து தளங்களிலும் கிடைக்கிறது.

மேம்படுத்தப்பட்ட மினி பிளேயர்: இரண்டு வேலைகளை ஒரே நேரத்தில் - வீடியோ பார்க்கும்போது, வேறு சில தகவல்களைத் தேடுவது இயல்பு. இதற்கு வசதியாக, யூடியூப் மேம்படுத்தப்பட்ட மினி பிளேயரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வீடியோ சிறிய திரையில் தோன்றும். இதனால், வீடியோவை இயக்கியவாறே நாம் வேறு தளங்களில் உலாவலாம்.

செயற்கை நுண்ணறிவு: யூடியூப் தற்போது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பிளேலிஸ்ட்டை உருவாக்கிக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், நாம் விரும்பும் தீம் அல்லது பாணியைத் தேர்ந்தெடுத்து, AI உருவாக்கிய புகைப்படங்களைப் பயன்படுத்தி பிளேலிஸ்ட்டை அழகாக வடிவமைக்கலாம்.

User Interface மாற்றம்: இந்த புதுப்பிப்புகளுடன், யூடியூப் தனது பயனர் இடைமுகத்திலும் (User Interface) சில மாற்றங்களைச் செய்துள்ளது. இதன் மூலம், பயனர்கள் இன்னும் எளிமையாகவும், வேகமாகவும் யூடியூபை பயன்படுத்த முடியும். குறிப்பாக, டிவி பயன்பாட்டில் புதிய இளஞ்சிவப்பு நிறம் மற்றும் பிற வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:
டிரைவர் இல்லாத ரோபோ டேக்ஸி…  எலான் மஸ்கின் புதிய கனவு! 
Youtube

பதிப்புரிமை பிரச்சினைகளுக்கான தீர்வு: வீடியோ உருவாக்குபவர்கள் தங்கள் வீடியோக்களில் பதிப்புரிமை பெற்ற இசையை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வாக, யூடியூப் புதிய 'erase song' அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், வீடியோ உருவாக்குபவர்கள் தங்கள் வீடியோக்களில் இருந்து பதிப்புரிமை பெற்ற இசையை எளிதாக நீக்கலாம்.

இந்த புதிய அம்சங்கள் யூடியூப் பயன்பாட்டு அனுபவத்தை முற்றிலும் மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை. இதன் மூலம், பயனர்கள் இன்னும் எளிமையாகவும், வேகமாகவும், சுவாரசியமாகவும் யூடியூபை பயன்படுத்த முடியும். மேலும், இது வீடியோ உருவாக்குபவர்களுக்கும் இது பல நன்மைகளைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com