Google Bard-ல் இணைக்கப்பட்ட தமிழ் மொழி.

Google Bard-ல் இணைக்கப்பட்ட தமிழ் மொழி.
Published on

கூகுள் நிறுவனத்திற்கு சுந்தர் பிச்சை CEO-ஆக மாறியதிலிருந்தே பல முன்னேற்றங்களை அது அடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர் பல விஷயங்களை செய்துள்ளார். தற்போது கூகுள் நிறுவனத்தின் Bard AI Chatbot-ல் தமிழ் மொழிக்கான ஆதரவு இணைக்கப்பட்டுள்ளது. 

முன்பெல்லாம் AI பற்றிய செய்தி ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒருமுறை வரும். இப்போது தினசரி Ai பற்றிய ஏதாவது ஒரு செய்தி வந்த வண்ணம் இருக்கிறது. இப்படிதான் கடந்த ஓராண்டில் Ai துறை பற்றிய பெரும்பாலான விஷயங்கள் நாம் அனைவருக்குமே தெரிந்துவிட்டது. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் கூகுள் நிறுவனத்திற்கும் ஏஐ துறையின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. அதனாலேயே ChatGPT வெளியிட்ட உடனே அவர்களின் சொந்தத் தயாரிப்பான Bard AI Chatbot-ஐ வெளியிட்டனர். தொடக்கத்தில் இது விமர்சிக்கப்பட்டாலும், பின்னர் ChatGPT போலவே சிறப்பாக செயல்படும் மேம்படுத்தல்களை அடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது Google Bard-ல் தமிழ் மொழிக்கான ஆதரவு சேர்க்கப்பட்டுள்ளது. 

தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது, பெங்காலி, ஹிந்தி, குஜராத்தி உட்பட 40 பிராந்திய மொழிகளுக்கான ஆதரவும் கூகுள் Bard-ல் இணைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பிராந்தி மொழிகளுக்கான ஆதரவை கூகுள் பார்ட் பெற்றுள்ளதால், இனிவரும் காலங்களில் எல்லா இடங்களிலும் இது பிரபலமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பிராந்திய மொழிகளை அடிப்படையாகக் கொண்டு இனி பயனர்கள் கூகுள் பார்டில் கேள்விகளைக் கேட்க முடியும். மேலும் பிராந்திய மொழிகளின் வரிகளை அதில் உள்ளீடு செய்து, சவுண்ட் ஐகானை கிளிக் செய்தால், நீங்கள் என்ன உள்ளீடு செய்தீர்களோ அதை கூகுள் பார்ட் உங்களுக்காக படித்துக் காட்டும். இப்படி தென்னிந்திய மொழி களுக்கான ஆதரவையும் சேர்த்து பிரேசில் மற்றும் ஐரோப்பிய பகுதிகளிலும் Bard Chatbot-ஐ அணுகலாம் என அறிவித்துள்ளனர். 

கூகுள் பார்டில் உங்களுக்கு கிடைக்கும் பதில்களை ஐந்து விதமாக நீங்கள் அட்ஜஸ்ட் செய்ய முடியும். சிம்பிள், லாங், ஷாட், ப்ரொபஷனல், கேஷுவல் இவைகளின் கீழ் கூகுள் பார்ட் வழங்கிய பதில்களை உங்களுக்கு ஏற்ற வகையில் மாற்ற முடியும். மேலும் கூகுள் பார்ட்டில் நீங்கள் தேடிய முக்கிய தரவுகளை Pin செய்து வைத்துக்கொள்ளலாம். அதை எளிதாகக் கண்டுபிடிக்க Rename செய்வதற்கான அம்சமும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com