நமது காலடியில் இருக்கும் தார் சாலைகள் உருவான சுவாரசிய வரலாறு!

tar-roads
tar-roads
கலைமதி சிவகுரு

I am so thankful for kalki in my life. I am graduate from Holy Cross college in Nagercoil in the year 1983.I also tailaring work and make some bags, pouches. My writing were published in mangayarmalar, and Devathai, kudumbamalar with thinathanthi and received some prizes. Now I am writing in kalki publications. Cooking, Writing, reading anmigam books, playing chess are my hobbies.

Updated on: 

சுமார் 50 வருடத்திற்கு முன்னால் நாம் கண்கூடாக பார்த்திருக்கிறோம். சாலை ஓரங்களில் பெரிய தகர டப்பாக்களில் வைத்து தார் காய்ச்சி சல்லி நிரப்பிய ரோடுகளில் சீராக பரப்புவார்கள். இந்த கீல் காலில் பட்டுவிடும் என்றே வேறு பாதையோடு செல்வது நினைவில் வருகிறது. இப்போது இதை காண்பது அரிதாக இருக்கிறது. இந்த சாலைகளை அமைக்கும் முறையில் புரட்சியை ஏற்படுத்தியது ஸ்காட்லாந்து பொறியாளர்கள்.

நவீன சாலைக் கட்டுமானத்துறையின் முன்னோடிகளான தாமஸ் டெல்ஃபோர்ட் (Thomas Telford) மற்றும் ஜான் மெக்காடம் (John McAdam) இருவரும் 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சாலைகளை அமைக்கும் பணியை தொடங்கினார்கள்.

தாமஸ் டெல்ஃபோர்ட்: இவர் “சாலைகளின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார். இவரது சாலை அமைக்கும் முறை மிகவும் வலுவானது. இவர் சாலையின் அடியில் பெரிய கற்களை (Foundation) அடுக்கி, அதன் மேல் சிறிய கற்களைக் கொண்டு நிரப்பினார்.

சாலைகளின் நடுப்பகுதி சற்று உயரமாக இருக்கும்படி வடிவமைத்தார், இதனால் மழை நீர் தேங்காமல் இருபுறமும் வடிந்துவிடும். லண்டன் முதல் ஹோலிஹெட் வரை இவர் அமைத்த சாலை இன்றும் இவரது திறமைக்குச் சான்றாக உள்ளது.

ஜான் லூடன் மெக்காடம்: இவருடைய பெயரிலிருந்துதான் “மெக்காடம் சாலைகள்” (Macadam Roads) என்ற சொல் உருவானது. இன்றும் நாம் பயன்படுத்தும் தார் சாலைகளுக்கு இவரே அடிப்படை. டெல்ஃபோர்ட் போல பெரிய கற்களைப் பயன்படுத்தாமல், சிறிய அளவிலான உடைந்த கற்களை (Broken stones) அடுக்கி சாலைகளை அமைத்தார். கனமான வாகனங்கள் அந்தச் சாலைகளில் செல்லும்போது, கற்கள் ஒன்றோடொன்று இறுகி சாலை வலிமையாகும் என்ற தத்துவத்தைப் பயன்படுத்தினார். பிற்காலத்தில் இவர் முறைப்படி அமைக்கப்பட்ட சாலைகளின் மேல் ‘தார்’ (Tar) ஊற்றப்பட்டதால், அவை Tarmacadam (சுருக்கமாக Tarmac) என்று அழைக்கப்பட்டன.

இவர்கள் இருவருடைய கண்டு பிடிப்புகள்தான் இன்று நாம் காணும் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு (Highways) அடித்தளம் அமைத்தன.

தார் சாலைகள் (Tar Roads) அமைக்கும் முறை: இது வெறும் தாரைப் பூசுவது மட்டுமல்ல, அது பல அடுக்குகளைக்கொண்ட ஒரு நேர்த்தியான பொறியியல் செயல்முறை. இன்று நாம் பயன்படுத்தும் இந்த முறையை பிட்மினஸ் சாலைகள் (Bituminous Roads) என்று அழைக்கிறோம்.

இதையும் படியுங்கள்:
வானில் மிதக்கும் ஒரு நகரம்! ஏர்பஸ் ஏ380-ன் வியக்கவைக்கும் ரகசியங்கள்!
tar-roads

இதன் படிநிலைகள்

தரைத்தளம் தயாரித்தல்: முதலில் சாலை அமையப் போகும் இடத்தில் உள்ள மண் சீர்செய்யப்படுகிறது. மரங்கள், கற்கள் நீக்கப்பட்டு, கனமான உருளைகள் கொண்டு மண் நன்றாக அழுத்தப்படுகிறது. இதுவே சாலையின் அடித்தளம்.

ஜல்லிக்கற்கள் அடுக்கு: மண்ணுக்கு மேல் பெரிய அளவிலான ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் கலவை பரப்பப்படுகிறது. இது சாலையின் எடையைத் தாங்கும் முக்கிய அடுக்கு ஆகும். ஜான் மெக்காடம் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பம் இங்குதான் பயன்படுத்தப்படுகிறது.

பிட்மன் அல்லது தார் தயாரிப்பு: பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் கருப்பு நிற பிசுபிசுப்பான திரவமே பிட்மன். இதை சுமார் 150° C முதல் 180°C வெப்பநிலையில் சூடுபடுத்தி, அதனுடன் சிறிய அளவிலான ஜல்லிக்கற்கள் மற்றும் மணல் சேர்க்கப்பட்டு ‘ஹாட் மிக்ஸ்’ தயார் செய்யப்படுகிறது.

சாலை பரப்புதல்: தயார் செய்யப்பட்ட சூடான தார்-ஜல்லிக் கலவையை ‘பேவர்’ (Paver) இயந்திரம் மூலம் சாலை முழுவதும் சீராகப் பரப்புகிறார்கள்.

அழுத்துதல்: பரப்பப்பட்ட கலவை சூடாக இருக்கும்போதே, கனமான ரோடு ரோலர்கள் கொண்டு அழுத்தப்படுகிறது. அப்போதுதான் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளிகள் நிரப்பப்பட்டு, சாலை உறுதியாக மாறும்.

தார் சாலையின் சிறப்பம்சங்கள்:

1.மழை நீர் சாலைக்குள் இறங்காமல் தார் தடுத்துவிடும், இதனால் அடியில் உள்ள மண் அரிக்கப்படாது.

2.வாகனங்களின் வேகத்திற்கும் எடைக்கும் ஏற்ப இந்தச்சாலைகள் சற்றே வளையும் தன்மை கொண்டவை, அதனால் விரிசல் ஏற்படுவது குறையும்.

இதையும் படியுங்கள்:
நம்பி ஏமாந்த கஸ்டமர்ஸ்... பாதுகாப்புனு வாய் கிழிஞ்ச கம்பெனியோட மொத்த சீக்ரெட்டும் சந்தி சிரிக்குது!
tar-roads

3.சிமெண்ட் சாலைகளுடன் ஒப்பிடும்போது, தார் சாலைகளில் வாகனங்கள் செல்லும்போது சத்தம் குறைவாக இருக்கும்.

இப்போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, பிளாஸ்டிக் கழிவுகளைத் தாருடன் கலந்து “பிளாஸ்டிக் சாலைகள்” அமைக்கும் முறை இந்தியாவில் பிரபலமாகி வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com