Tech Mahindra: வேலை தேடுபவர்களுக்காக புதிய இணையதளம்!

Tech Mahindra New Website.
Tech Mahindra New Website.
Published on

டெக் மஹீந்திரா நிறுவனம் வேலை தேடும் நபர்களுக்காக புதிய இணையதளத்தை உருவாக்கி உள்ளது.

அமெரிக்கா, கன்னடா, ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பணியாளர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய அளவில் உள்ளது. இது கார்ப்பரேட் நிறுவனங்களையும் பாதித்திருக்கிறது. மேலும் பணியாளர் பற்றாக்குறை காரணமாக நவீன தொழில்நுட்பங்களை புகுத்த பெரிய நிறுவனங்கள் முதல் சிறிய நிறுவனங்கள் வரை அனைத்து வகையான நிறுவனங்களும் ஆர்வம் காட்டுகின்றன. அதே நேரம் இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் வேலை இல்லா திண்டாட்டம் இன்று மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

இந்திய மக்கள் தொகையின் 50 சதவீதம் பேர் இளைஞர்களின் என்பதாலும், மேலும் அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நபர்கள் வேலையில்லா பிரச்சினையால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பல்வேறு விதமான ஆய்வறிக்கைகள் கூறுகின்றனர். இந்த நிலையில் இணைய வழியாகவே பெரிய நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை கண்டறிய உதவும் வகையில் புதிய இணையதளத்தை டெக் மஹீந்திரா நிறுவனம் ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த இணையதளம் டெக் மஹீந்திராவின் இந்த பாப்புலி இணையதளம் என்ற கிரவுண்ட்சோர்சிங் தளமாக செயல்படும். இதன் மூலம் தொழிலாளர்கள் வேலைகளை பெற முடியும். பெரிய நிறுவனங்களின் தகவல்கள், கருத்துகள், தேவைகளை இந்த இணையதளத்தின் வாயிலாக வெளிப்படுத்தும். இதன் மூலம் உலகின் எந்த மூலையில் இருக்கும் நபராக இருந்தாலும் உடனடியாக அவருக்கு இணைய வழியாக உடனடியாக தகவல் சென்றடைவதுடன் வேலை தேடும் நபர்கள் இதனால் பயனடைவார்கள்.

இதையும் படியுங்கள்:
அர்ப்பணிப்புடன் வேலை செய்தால் நிச்சயம் வெற்றிதான்!
Tech Mahindra New Website.

இதனால் எல்லை தாண்டிய வேலைவாய்ப்பு உருவாகும். ஊதியம் சரியான நேரத்தில் வழங்கப்படுகிறதா என்பதும் உறுதி செய்யப்படும். இந்த புதிய இணையதளம் வேலைத் வேலை தேடும் நபர்களுக்கான மிக முக்கிய நடவடிக்கையாக வருங்காலத்தில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com