
கம்ப்யூட்டருடன் மூளையை இணைக்கும் நவீன தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டும் எலான் மஸ்க்.
ஆச்சரியம் தரக்கூடிய பல்வேறு அதிநவீன கண்டுபிடிப்புகள் நாளுக்கு நாள் புழக்கத்தில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த வகையில் வருங்காலத்தை தீர்மானிக்கக் கூடிய அதிநவீன கண்டுபிடிப்புகளை கொண்டு வர பல்வேறு தொழிலதிபர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். இதில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சற்று தீவிரமான செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறார்.
தற்போது எலான் மஸ்க் எடுத்து வரும் தீவிர முயற்சி வருங்காலத்தை தீர்மானிக்கக்கூடிய தொழில்நுட்பம் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இப்படி எலான் மஸ்க் எதை கண்டுபிடிக்க தீவிர முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்பதை பார்ப்போம். மனிதனின் மூளையை கணினியோடு இணைக்கும் முயற்சி தான் அது. சிறிய அளவிலான ஒயர்களைக் கொண்டு கணினியை மனித மூளையோடு இணைத்து கீபோர்டுகளையும், மௌஸ்களையும் இயக்க கூடிய கண்டுபிடிப்பை உருவாக்க முயற்சி எடுத்து வருகிறார்.
மேலும் இந்தத் திட்டத்தில் இரண்டாவது கட்டம் மனித சிந்தனைகளை கணினி வழியாக வெளிப்படுத்துவது என்றும் தெரிவித்து இருக்கிறார்கள். இது நியூராலிக் திட்டம் என்று அழைக்கப்படுகிறது. அதேசமயம் திட்டத்திற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளிக்கவில்லை. இத்திட்டம் மனித மூளையில் பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்றும் தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறது.
மேலும் நியூராலிக் திட்டம் மூலம் கணினியை மனித முளையோடு இணைக்கும் முதல் கட்ட ஆராய்ச்சி பணிக்காக விலங்குகளை பயன்படுத்தியதாக எலான் மஸ்க் மீது குற்றம் சாட்ட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.