தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள தொலைதொடர்பு மசோதா 2023யில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள்.
ஒன்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தாக்கல் செய்த தொலைத்தொடர்பு மசோதா 2023க்கு மக்களவை ஒப்புதல் அளித்தது .
இந்த மசோதாவின் மூலம், அரசாங்கம் தொலைத்தொடர்புக்கு ஒரு வரையறையை அமைத்துள்ளது, மேலும் தொலைத் தொடர்பு நெட்வொர்க்குகளுக்கான தற்போதைய உரிம முறையை எளிமைப்படுத்த முயல்கிறது. தற்போது, தொலைத்தொடர்புத் துறையானது 100-க்கும் மேற்பட்ட உரிமங்கள், பதிவுகள் மற்றும் அனுமதிகளை வழங்குகிறது, மேலும் இவற்றை ஒரே அங்கீகார செயல்முறையில் இணைக்க முயல்கிறது.
மேலும் தொழில்துறைக்கு கடுமையான மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. தேசிய பாதுகாப்புக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. அவசர காலகட்டங்களில் அரசாங்கம் எந்த வகை நிறுவனங்களையும் கட்டுப்படுத்த அதிகாரம் கொண்டதாகவும், அனைத்து வகை தகவல்களை பகுப்பாய்வு செய்யும் அதிகாரம் கொண்டதாகவும் இச்சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மேலும் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக இச்சட்டம் விரிவான நடைமுறைகளை பின்பற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் தகவல் தொழில்நுட்பம் மூலம் பாதிக்கப்படும் நேரங்களில் தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பொதுமக்களுக்கு கட்டாயம் செய்து தர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது. இச்சட்டத்திற்கு ஆதரவு எதிர்ப்பு என்று பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.