மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவை!

cell phone tower
cell phone towerIMG Credit: Freepik

சென்னை மழை வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்று மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இயற்கையின் சீற்றம் பல ஆண்டு கால மனித உழைப்பை சிறிது நேரத்தில் சிதைத்து இருக்கிறது. மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக சென்னை நகரின் சில பகுதிகளில் 29 சென்டிமீட்டர் வரை அதிகபட்ச மழைப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியது. மேலும் மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றும் வீசியதால் மக்களினுடைய இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட மக்கள் வெளியே வர முடியாது சூழல் ஏற்பட்டது. இப்படி டிசம்பர் 4ம் தேதி அன்று ஒட்டுமொத்த சென்னை மக்களினுடைய வாழ்க்கையையும் புரட்டி போட்டு இருக்கிறது மிக்ஜம் புயலின் தாக்கம்.

இந்த நிலையில் புயல் ஆந்திர கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்ததால் சென்னையில் மழை குறைந்து இருக்கிறது. அதேசமயம் பல்வேறு பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரும் வடிய தொடங்கி இருக்கிறது. போக்குவரத்து சீராகி உள்ளது. ஆனாலும் இன்னும் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயல்பாட்டை தொடங்காமல் இருக்கின்றன.

சென்னை மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் பல்வேறு டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன, தொலைத்தொடர்பு சாதனங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு நிறுவனங்களினுடைய தொலைபேசி இணைப்புகள் இன்னும் பல பகுதிகளுக்கு சென்றடையாத சூழல் இருக்கிறது. இதனால் அவசர உதவிக்கு கூட பிறரை அழைக்க முடியாமல் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவின் 121 மொழிகளை உள்ளடக்கிய AI தொழில்நுட்பம்!
cell phone tower

2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் சென்னையின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான சேவையை வழங்கியது. ஆனால் தற்போது அதைக் காட்டிலும் கூடுதல் மழைப்பொழிவு ஏற்பட்டிருப்பதால் தொலைத் தொடர்பு சாதனங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது சென்னையில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதால் தொலைதொடர்பு சாதனங்களை சரி செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிசம்பர் 5) இரவிற்குள் அனைத்து பகுதிகளுக்கும் தடையற்ற தொலைத்தொடர்பு சேவை வழங்க தீவிர பணி நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் பேரிடர் காலங்களை எதிர்கொள்ளும் வகையில் இந்திய தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களுடைய கட்டமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com