Tesla Cybertruck விலை? வாக்கு தவறிய எலான் மஸ்க்!

Tesla Cybertruck.
Tesla Cybertruck.

மக்களின் அதிக எதிர்பார்ப்பு மற்றும் காத்திருப்புகளுக்கு மத்தியில் டெஸ்லா சைபர்ட்ரக்கின் விலையை அதிகாரப்பூர்வமாக டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சைபர் ட்ரக் என்ற புதிய காரை வெளியிடப்போவதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். இந்த ட்ரக் 40,000 டாலர்கள் என்ற விலையில் விற்பனைக்கு வரும் எனக் கூறிய எலான் மஸ்க், அதை வாங்குவதற்கு 100 டாலர்கள் செலுத்தி இப்போதே முன்பதிவு செய்யுமாறு தெரிவித்தார். இவரது வார்த்தையை நம்பி ஒரு மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் சைபர் ட்ரக் வாங்குவதற்கு முன்பதிவு செய்தனர். இந்த ட்ரக் சந்தைக்கு வர கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 

அதேநேரம் சைபர் ட்ரக்கின் விலை என்று பார்க்கும்போது, ஆரம்ப விலையே 60990 அமெரிக்க டாலர்கள் என அந்நிறுவனம் நிர்ணயம் செய்துள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 50 லட்சத்திற்கும் மேல். இந்த விலையானது 2019 ஆம் ஆண்டு எலான் மாஸ் மேற்கோள் காட்டிய விலையை விட மிகவும் கூடுதலாகும். அதுவும் இந்த சைபர் ட்ரக் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. 

சாதாரண ட்ரக்கை விட இந்த சைபர் ட்ரக் மிகவும் சிறந்தது என்றும், ஒரு ஸ்போர்ட்ஸ் காரை விட வேகமானது என்றும் எலான் மஸ்க் கூறுகிறார். இந்த வாகனம் ஒரு ஆல்வீல் டிரைவ் வகையைச் சேர்ந்தது என்பதால், இதன் செயல்திறன் சிறப்பாக இருக்கும். அதிக செயல்திறன் கொண்ட Cyberbeast என்ற புதுவகை ட்ரக் அடுத்த ஆண்டு முதல் மக்களுக்கு கிடைக்கும் என டெஸ்லா நிறுவனம் தன் இணையத்தில் தெரிவித்துள்ளது. இதன் விலை 80000 முதல் 1 லட்சம் டாலர்கள் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்:
ஸ்பேம் கால் (Spam Call) தொல்லை இனி இல்லை!
Tesla Cybertruck.

2025 ஆம் ஆண்டில் சைபர் ட்ரக் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் யூனிட்டுகள் உற்பத்தியை எட்டும் என எலான் நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இருப்பினும் அவர் தெரிவித்த விலையை விட, நிர்ணயம் செய்துள்ள விலை அதிகமாக இருப்பதால், சைபர் ட்ரக் விரும்பிகள் அதிருப்தியில் உள்ளனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com