இந்தியாவுக்கு வருகிறதா டெஸ்லாவின் புதிய ஆலை?

இந்தியாவுக்கு வருகிறதா டெஸ்லாவின் புதிய ஆலை?
Published on

ட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம்தான் டெஸ்லா. உலகின் பல தலைசிறந்த நிறுவனங்கள் ஆட்டோமேட்டிக் காரை வெறும் சோதனை கட்டத்தில் வைத்திருக்கும் நிலையில், பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தையில் வெற்றிகரமாக டெஸ்லா கார்களைக் கொண்டு வந்தவர் எலான் மஸ்க். 

தற்போது இவர் அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாகாணத்தில் பிரம்மாண்ட அளவில் Tesla Giga Factory நடத்தி வருகிறார். இங்கு அதிகப்படியான டெஸ்லா கார்கள் தயாரிக்கப்படுகின்றன. எலக்ட்ரிக் கார்கள் ஆட்டோ பைலட் கார்கள் என சந்தையில் பலவித கார்களை விரிவுபடுத்தி, ஆட்டோமொபைல் சந்தையை தன் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்த கார்தான் டெஸ்லா. 

இந்நிலையில் அடுத்த தலைமுறை தயாரிப்புகளை உருவாக்க டெஸ்லா நிறுவனம் முயற்சித்து வருகிறது. இதனால் மேலும் பல வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட கார்களை தயாரிக்கும் ஏற்பாடுகளை செய்து வருகிறது. தற்போது இதற்காகவே பிரத்தியேகமாக மெக்சிகோவில் புதிய ஆலை ஒன்றை உருவாக்கவும் முடிவு செய்துள்ளது. அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. உலகின் மிக பிரம்மாண்டமான எலக்ட்ரிக் வாகனம் தயாரிக்கும் ஆலையாக இது இருக்கும் என, அதன் மாதிரி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவில் தற்போது இருக்கும் ஆலை 2500 ஏக்கர் நிலப்பரப்பில் இயங்கி வருகிறது. ஆனால் மெக்சிகோவில் உருவாகப்போகும் ஆலை சுமார் 4200 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இது டெக்ஸாஸில் உள்ள ஆலையை விட 68 சதவீதம் பெரியதாகும். இதற்காக டெஸ்லா நிறுவனம் சுமார் பத்து மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளதாக கூறியுள்ளது. 

இதில் 10000 ஊழியர்கள் நேரடியாக பணியிட மாற்றம்பட உள்ளனர். தொடக்கத்தில் 5000 ஊழியர்களை  பணியமர்த்தி வெறும் 5 பில்லியன் டாலர்களில் உருவாக்கப்படவிருந்த இந்த திட்டம், பின்னர் இரண்டு மடங்காக விரிவாக்கப்பட உள்ளது. பேட்டரி செல் டிரைவிங் யூனிட் மற்றும் வாகன கட்டுமானம் என மொத்தம் மூன்று பிரிவுகளாக இந்த ஆலை செயல்படும். 

இதில் ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் வரை தயாரிக்க முடிவு செய்துள்ளது டெஸ்லா நிறுவனம். இதனால் டெஸ்லா காரின் உற்பத்தி பெரிய அளவில் அதிகரிக்கும். அமெரிக்காவைத் தாண்டிய ஆலைகளில் டெஸ்லா நிறுவனத்திற்கு இது மூன்றாவது ஆலையாகும். ஏற்கனவே ஜெர்மனியிலும் சீனாவிலும் இந்நிறுவனத்தின் ஆலைகள் அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவில் தனது தொழிலை தொடங்க எலான் மாஸ்க் இந்திய அரசிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. வெளிநாட்டில் இருந்து கார்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக் காததால், இந்தியாவில் பிசினஸ் செய்ய டெஸ்லா நிறுவனம் மறுத்துவிட்டது. சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி டெஸ்லா ஆலையை இந்தியாவிலேயே தொடங்கினால்தான் குறைந்த விலையில் டெஸ்லா கார் விற்பனை செய்ய முடியும். 

புதிய டெஸ்லா ஆலை மெக்ஸிகோவில் தொடங்கப் படுவதற்கு இன்னொரு காரணம், மெக்சிகோ அமெரிக்காவுக்கு அருகில் உள்ளதால் அமெரிக்காவின் கார்களை கூட மெக்சிகோவில் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதைக் கருத்தில் கொண்டு மெக்சிகோவில் புதிய ஆலை தொடங்கப் பட்டுள்ளது. ஒருவேளை தெற்காசிய நாடுகளில் டெஸ்லா தொழில் தொடங்க விரும்பினால் இந்தியாதான் நல்ல தேர்வாக இருக்கும்.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com