சாதாரண போன்கள் ஒருபுறம் இருக்க, தீப்பெட்டிக்குள் அடங்கும் அளவிற்கு சிறிய அளவில் போன்களும் இருக்கின்றன. அவற்றின் அளவைக் கேட்டால் நிச்சயம் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இவை அளவில் சிறியதாக இருந்தாலும், அழைப்பு, மெசேஜிங் மற்றும் சில சமயங்களில் கேமரா போன்ற அம்சங்களை வழங்குகின்றன. இந்த மினி போன்களை விரும்பும் நபர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள். மிகவும் லேசான மற்றும் அளவில் மிக சிறிய போன்களைப் பற்றிப் இந்தப் பதிவில் பார்ப்போம்.
இது உலகின் மிகச் சிறிய மொபைல் ஆகும். இதன் நீளம் வெறும் 46.7 மிமீ மற்றும் எடை 13 கிராம் மட்டுமே. இது 0.49 இன்ச் OLED திரையைக் கொண்டுள்ளது. 2G நெட்வொர்க் வசதி உள்ளது. 300 தொடர்புகளைச் சேமிக்கும் வசதியும் இதில் இருக்கிறது. இதன் 200 mAh பேட்டரி, ஒருமுறை சார்ஜ் செய்தால் 3 நாட்கள் வரை தாங்கும். இது மிகவும் சிறியதாக இருப்பதால், இதை ஒரு பாக்கெட் அல்லது தீப்பெட்டியில் கூட எளிதாக வைத்து எடுத்துச் செல்லலாம்.
டைனி டி2 என்பது டைனி டி1-இன் மேம்படுத்தப்பட்ட தயாரிப்பு. இதில் 3G நெட்வொர்க், கேமரா, 128MB RAM மற்றும் 64MB உள் சேமிப்பகம் உள்ளது. இதன் எடை வெறும் 31 கிராம் மற்றும் பேட்டரி பேக்கப் சுமார் 7 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ஃபோனில் இசை, வீடியோக்கள் மற்றும் அடிப்படை விளையாட்டுகளையும் அணுக முடியும்.
இது உலகின் மிகச் சிறிய 4G ஸ்மார்ட்ஃபோன் என்று கருதப்படுகிறது. இது 3 இன்ச் திரை, ஆண்ட்ராய்டு 11, 6GB RAM மற்றும் 128GB சேமிப்பகத்துடன் வருகிறது.
ஃபேஸ் அன்லாக், ஜிபிஎஸ், கேமரா, Wi-Fi மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் வசதிகளும் இதில் உள்ளன. இதன் எடை 110 கிராம் மட்டுமே.
அழைப்புகள் மற்றும் மெசேஜ்களுக்காக மட்டுமே இந்தப் போனைப் பயன்படுத்த முடியும். இது 4G நெட்வொர்க் வசதியைக் கொண்டுள்ளது. சமூக வலைதளங்கள், விளையாட்டுகள் அல்லது ஆப்ஸ் என எதுவும் இதில் இல்லை - அத்தியாவசிய அம்சங்கள் மட்டுமே உள்ளன. சிறிய அளவு, பிரீமியம் வடிவமைப்பு மற்றும் நீண்ட பேட்டரி ஆயுள் ஆகியவற்றை இது கொண்டுள்ளது.
இந்த போன் உலகின் மிக மெலிதான போன் என்று அழைக்கப்படுகிறது. இதன் தடிமன் வெறும் 5.3 மிமீ மற்றும் எடை 47 கிராம். இது 2.8 இன்ச் மோனோக்ரோம் திரையைக் கொண்டுள்ளது. மேலும், இதை அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் இணையத்தில் தேடுவதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஜப்பானில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த போன் ஒரு கிரெடிட் கார்டு போன்று தோற்றமளிக்கிறது.
இந்தச் சிறிய போன்கள், பெரிய திரைகளைக் கொண்ட ஸ்மார்ட்ஃபோன்களுக்கு ஒரு சுவாரசியமான மாற்றாக இருக்கின்றன. இவை சிறிய அளவு, தனித்துவமான வடிவமைப்பு மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்காக உருவாக்கப்பட்டு, பலரையும் வியக்க வைக்கின்றன.