ஆப்பிள் விஷன் ப்ரோ என்னை வியப்படையச் செய்யவில்லை.

ஆப்பிள் விஷன் ப்ரோ என்னை வியப்படையச் செய்யவில்லை.

மெட்டா ஊழியர்களுக்கான நிறுவன அளவிலான கூட்டத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோ ஹெட்செட் பற்றிய தனது எண்ணங்களைப் பற்றி மனம் திறந்தார் மார்க் ஜூக்கர்பெர்க்.

ஆப்பிள் தனது புரட்சிகர விஷன் ப்ரோ ஹெட்செட்டை வெளியிட்டு பிரபலமடைந்தாலும், மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்குக்கு இது எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது போல் தெரிகிறது. மெட்டா நிறுவனம் அதன் விஆர் ஹெட்செட்டான Quest 3-ஐ அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் விஷன் ப்ரோவை அறிமுகப்படுத்தியது. இருப்பினும் இரண்டு தொழில்நுட்ப ஜாம்பவான்களும் ஏஆர் பற்றிய அவர்களின் பார்வைகளுக்கு இடையிலான தற்போதைய ஒப்பீடுகளால், ஜுக்கர்பெர்க் குழப்பம் அடையவில்லை என்று அவர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரிகிறது. 

மெட்டா ஊழியர்களுடனான நிறுவன அளவினான சந்திப்பில், மெட்டா ஏற்கனவே ஆராயாத புதிய தொழில்நுட்பத்தில் ஒன்றும், ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோவில் எவ்வித முன்னேற்றத்தையும் கொண்டு வரவில்லை என ஜுக்கர்பெர்க் கூறினார். மக்கள் அந்த சாதனத்தை எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதற்கான ஆப்பிள் நிறுவனத்தின் பார்வை, என்னுடைய பார்வைக்கு சமமானதல்ல என அவர் கூறினார். மெட்டா நிறுவனத்தின் Quest 3ன் விலை 499 டாலர்களாகும். இதுவே, ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோவின் விலை 3,499 டாலர்களாகும். விலையின் அடிப்படையில் எங்களின் சாதனம்தான் அதிக நபரால் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என வலியுறுத்தினார். 

மேலும் இது பற்றி அவர் தெரிவிக்கையில், "ஆப்பிள் நிறுவனத்தின் விஷன் ப்ரோவின் மதிப்பு மற்றும் பார்வையில் உள்ள வேறுபாட்டை எங்கள் நிறுவன சாதனத்திலும் கொண்டு வருவது மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். 2020 முதல் இது சார்ந்த ஆராய்ச்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். எங்களின் Quest  ஹெட்செட்டைப் பயன்படுத்தி சுறுசுறுப்பாக இருப்பது மற்றும் அதே நேரத்தில் புதிய வழிகளில் மக்களை தொடர்பு கொண்டு நெருக்கமாக உணர வைக்க முடியும்.

நாம் இதுபோன்ற சாதனங்களை எப்படி அணுகுகிறோம் என்பதில் ஒரு உண்மையான தத்துவ வேறுபாடு இருக்கிறது. மேலும் ஆப்பிள் நிறுவனம் என்ன செய்கிறார்கள் என்பதையும் அவர்கள் எவ்வாறு போட்டியிடப் போகிறார்கள் என்பதையும் பார்த்து எனக்கு மேலும் உற்சாகமாக இருக்கிறது. மேலும் என்னுடைய பார்வையில் எங்களுக்காக நாங்கள் என்ன செய்கிறோம் என்பது மிக முக்கியம். எங்களுடைய தொலைநோக்குப் பார்வை நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. இது ஒரு நல்ல வேடிக்கையான அனுபவமாக இருக்கும்" என ஜுக்கர்பெர்க் அந்தக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். 

இது, மார்க் ஜூக்கர்பெர்க் தங்கள் நிறுவன சாதனத்தின் மீது எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com