பூமிக்கு நடுவே உள்ள Enigmatic E Prime என்ற மென்படலம் பல ஆண்டு காலமாக ஆய்வாளர்களுக்கு புரியாத ஒன்றாகவே இருந்து வந்தது. ஆனால் தற்போது இந்த மென்படலம் எப்படி உருவாகி இருக்கும் என்பது குறித்த உண்மையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நமது பூமி மொத்தம் மூன்று அடுக்குகளால் ஆனது. அதில் நாம் வாழும் மேல் பகுதியை Crust எனவும், அதற்கு அடுத்த பகுதியை Mantle எனவும், மையப்பகுதியை Core எனவும் கூறுவார்கள். இதில் கோர் பகுதி இன்னர் கோர் மற்றும் அவுட்டர் கோர் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அவுட்டர் கோருக்கும் Mantle-லுக்கும் இடையில் உள்ள மென்மையான படலம்தான் Enigmatic E Prime.
இது எப்படி உருவானதென்றால், பூமியின் மேற்பரப்பில் உள்ள தண்ணீர், டெக்டானிக் பிளேட்டுகள் வழியாக பூமியின் உள்ளே செல்கிறது. இப்படி மேண்டில் வரை செல்லும் தண்ணீர் ஒரு பகுதியில் உள்ள சிலிகானுடன் வினைபுரிந்து, ஹைட்ரஜன் மற்றும் சிலிக்கான் மூலக்கூறுகள் நிறைந்த Enigmatic E Prime மென்படலமாக உருவாகிறது. இந்த நிகழ்வு பல்லாண்டு காலமாக நடந்ததாலேயே இந்த மென்படலம் உருவாகி இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த புதிய கண்டுபிடிப்பினால் இந்த பூமி பற்றிய பல விஷயங்கள் தெரியவரும் என்றும், அதன் உருவாக்கத்தைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள இது உதவிபுரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதே போல பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் வேதியியல் சாத்தியக்கூறுகளை, உயர் அழுத்த பரிசோதனைகள் மூலமாக ஆய்வகங்களில் செயல்படுத்தி பார்க்கின்றனர். இதன் மூலமாகவும் பூமி பற்றிய பல உண்மைகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.