
நிலவு (moon)என்பது பூமியின் இயற்கையான ஒரே துணைக்கோள். இது சூரிய குடும்பத்தில் ஐந்தாவது பெரிய துணைக்கோளாகும். பூமியின் மீது அதன் ஈர்ப்பு விசையின் காரணமாக அலைகளை ஏற்படுத்துகிறது. சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் பௌர்ணமி மற்றும் அமாவாசை போன்ற நிலவின் வடிவத்தில் ஏற்படும் மாற்றத்தை நம்மால் காண முடிகிறது. நிலவின் ஈர்ப்பு விசை பூமியின் மீது கடலில் அலைகள் ஏற்படக் காரணமாகிறது. நிலவின் மேற்பரப்பில் நிரந்தரமாக நிழலான பகுதிகளில் நீர் பனி இருப்பதாக நாசா ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நிலவு என்றாலே அமைதியான, எந்த வேதியியல் மாற்றமும் நிகழாத ஒரு உலகம் என்று எண்ணி இருக்க, நிலவில் துரு(rust) பிடிக்கிறது என்று அண்மையில் நாசா செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுவாக துரு என்பது ஆக்ஸிஜனேற்றம் என்னும் வேதியியல் மாற்றத்தால் உருவாகும்.
இந்த ஆக்சிஜனேற்றம் நிகழ்வதற்கு காற்று மற்றும் நீர் இரண்டுமே தேவை. ஆனால், நிலவில் உள்ள மண்ணில் ஹெமடைட் (Hematite) எனப்படும் துருவின் கனிம வடிவம் இருப்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
நிலவின் நீர்ப்பரப்பில் துரு உருவாவது பூமியில் ஏற்படும் துருவிலிருந்து வேறுபட்டது. நிலவின் மண்ணில் இரும்பும், ஆக்ஸிஜனும் உள்ளன. பூமியின் வளிமண்டலத்தில் இருந்து வரும் காற்று மற்றும் பூமியின் காந்தப்புலம், சூரியக் கதிர்களில் இருந்து வரும் ஆக்ஸிஜன் அயனிகள் ஆகியவை இரும்பை துருப்பிடிக்க செய்கின்றன.
செவ்வாய் அதன் மேற்பரப்பில் உள்ள இரும்பு, நீர் மற்றும் ஆக்சிஜன் காரணமாக துருப்பிடித்து இருப்பதாக நீண்ட காலமாக அறியப்பட்டாலும், சமீபத்தில் காற்றற்ற சந்திரன் மீதும் துருப்பிடித்து உள்ளது என்பதற்கான ஆதாரங்களைக் கண்டு விஞ்ஞானிகள் ஆச்சரியம் அடைகின்றனர்.
துரு உருவாவதற்கான காரணங்கள்
நிலவுக்கு வளிமண்டலம் மற்றும் காந்தப்புலம் இல்லாததால், பூமியின் காந்தப்புலத்தின் பாதுகாப்பிலிருந்து வரும் ஆக்ஸிஜன் அயனிகள் நேரடியாக நிலவின் மண்ணில் உள்ள இரும்புடன் வினைபுரிந்து, ஹெமடைட் என்ற கனிமத்தை உருவாக்குகின்றன.
சந்திராயன்-1 விண்கலம் எடுத்த தகவல்களின்படி நிலவில் துரு உருவாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலவின் மண்ணில் இரும்பு அதிகமாக உள்ளது. இது துருப்பிடிப்பதற்கான முக்கிய மூலப்பொருளாகும். நிலவில் நீர் மற்றும் காற்று இல்லை என்றாலும், பூமியிலிருந்து வரும் ஆக்ஸிஜன் அயனிகள் நிலவின் இரும்புடன் வினைபுரிந்து துருவை உருவாக்குகின்றன.
பூமியில் ஏற்படும் துருப்பிடிக்கும் செயல்முறையை ஒத்திருந்தாலும் நிலவில் அது பெரும்பாலும் பூமியின் காந்தப்புலத்தின் தாக்கத்தால் நிகழ்கிறது.