உலகின் முதல் Snapdragon 8 Gen 5 போன் - OnePlus 15R அறிமுகம்!

OnePlus 15R
OnePlus 15RImg credit: Amazon
Published on

சீனாவை சேர்ந்த ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்தபடியே தனது புதிய OnePlus 15R மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த ஸ்மார்ட்போன், டிசம்பர் 21 அன்று ஒன்பிளஸ் பிரத்தியேக கடைகளில் விற்பனைக்கு வர உள்ளது.

திரை: புதிய ஒன்பிளஸ் 15R போன் அட்டகாசமான 6.83 இன்ச் AMOLED திரையுடன் வருகிறது. பளிச்சென்ற திரைக்கு பெயர் பெற்ற ஒன்பிளஸ் நிறுவனம், இந்த போனில் 1.5K தெளிவுத்திறன் (Resolution) மற்றும் 165Hz புதுப்பிப்பு திறனுடன் மேம்படுத்தி உள்ளது. இது கேமிங் பிரியர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்கும்.

பாதுகாப்பு: இந்த போன் தண்ணீரில் நனைந்தாலும் பாதுகாப்பாக இருக்கும். போன் சூடாகாமல் இருக்க வேப்பர் சேம்பர் சிஸ்டம் கூலிங் செயல்படுகிறது. தொடர்ச்சியான கேம் விளையாடும்போது வெப்பத்தைக் குறைக்க 360° சைரா வெலாசிட்டி கூலிங் அமைப்பு பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் 5704mm² 3D வேப்பர் சேம்பர் மற்றும் அதிக பாதுகாப்பு தரத்திலான இன்சுலேஷன் உள்ளது. இந்த போன் IP66 முதல் IP69K வரையிலான பாதுகாப்பு தரச்சான்றிதழ் பெற்றுள்ளது.

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு அடிப்படையிலான OxygenOS 16 இயங்குதளம் இதில் உள்ளது. மேலும் கூகுள் ஜெமினி AI வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் 15 ஐப் போலவே இதற்கும் 4 முக்கிய ஆபரேஷன் சிஸ்டம் அப்டேட்கள் மற்றும் 6 வருட செக்யூரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும். இதில், 'பிளஸ் மைண்ட்' என்ற புதிய அம்சம் உங்கள் தேவைகளைப் புரிந்துக் கொண்டு செயல்படும்.

​நினைவகம்: 12GB அல்லது 16GB RAM மற்றும் 512GB வரை மெமரி வசதி உள்ளது.

கேமரா: ​பின்புறம் எப்போதும் தனது கேமராக்களில் ஒன்பிளஸ் அதிக கவனத்தை செலுத்தும், இரவு நேரத்தில் கூட மிகத் தெளிவாக படம்பிடிக்கும் நுட்பம் இதில் உள்ளது. இந்த போனில் சோனி நிறுவனத்தின் IMX906 வகை தரமான 50MP மற்றும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. முன்புற செல்பி கேமராவும் 32MP அளவிற்கு திறன் கொண்டது. பின்புற கேமராக்கள் மூலம் 4K அளவில் துல்லியமான வீடியோக்களை மிகத் தெளிவாகப் பதிவு செய்யலாம்.

​பேட்டரி மற்றும் சார்ஜிங்: ஒன்பிளஸ் மொபைல்களில் அதிக திறன் கொண்ட பெரிய பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது. 7400mAh திறன் கொண்ட பெரிய பேட்டரி நீண்டநேர கேமிங், இண்டர்நெட் சர்ப்பிங், வீடியோ பார்க்க, ஆடியோ கேட்க என எதை செய்தாலும் நாள் முழுக்க சார்ஜ் தீராது. இந்த பேட்டரி 4 வருட பயன்பாட்டிற்குப் பிறகும் அதன் திறனில் 80% அப்படியே இருக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் கூறுகிறது. 80W திறனுடன் அதிவேக சார்ஜிங் வசதி கொண்டது. 23 நிமிடத்தில் 50% பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

நிறங்கள்: இது சார்கோல் பிளாக், மின்ட் ப்ரீஸ் மற்றும் எலக்ட்ரிக் வயலட் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது.​

விற்பனை: இதன் முன்பதிவு ஏற்கெனவே அமேசான் தளத்தில் தொடங்கி விட்டது. டிசம்பர் 21 முதல் அமேசான் தளத்தில் கிடைக்கும்.

இதன் விலை ஒன்பிளஸ் 12GB RAM + 256GB: ₹47,999, ஒன்பிளஸ் ​12GB RAM + 512GB: ₹52,999 என்ற அளவில் கிடைக்கும்.

முன்பதிவு செய்பவர்களுக்கு ₹2,299 மதிப்புள்ள OnePlus Nord Buds இலவசமாக கிடைக்கும். மேலும் வாழ்நாள் முழுக்க டிஸ்பிளே வாரண்டியும் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com