இந்த 8 விஷயங்கள் உங்கள் போனில் நடந்தால் ஆபத்து! 

These 8 things can happen to your phone at risk.
These 8 things can happen to your phone at risk.

மீப காலமாகவே மால்வேர் தாக்குதலில் சிக்கும் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் சாதனங்கள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 100ல் 90 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்ட்ராய்டு சாதனங்கள் இத்தகைய தாக்குதல்களால் பாதிப்படைய வாய்ப்புள்ளது எனச் சொல்லப்படுகிறது. 

நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனம் வைத்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் சாதனத்தை ஹேக்கர்கள் எளிதில் அணுக முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் சாதனம் ஹேக்கர்களால் அணுகப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள உங்கள் ஸ்மார்ட்போனில் ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம். 

  1. திடீரென வழக்கத்திற்கு மாறாக உங்கள் ஸ்மார்ட்போன் வெப்பமாக இருக்கிறது என்றால், அதில் ஏதோ சிக்கல் இருக்கிறது என அர்த்தம். 

  2. உங்களுக்கே தெரியாமல் உங்கள் சாதனத்தில் திடீரென ஒரு ஆப் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கிறதா எனப் பாருங்கள். அப்படி இருந்தால் உங்கள் ஸ்மார்ட்போன் பாதிப்படைந்திருக்க வாய்ப்புள்ளது.

  3. உங்கள் போனில் வைபை, ப்ளூடூத், ஹாட்ஸ்பாட் போன்றவை உங்களுடைய அனுமதி இல்லாமலேயே செயல்பாட்டில் இயங்குகிறது என்றால், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருங்கள்.  

  4. உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனின் பேட்டரியின் ஆயுள் குறைந்தால் கவனம் தேவை. ஏனென்றால் பேக்ரவுண்டில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் சாதனம் இயங்குகிறது என அர்த்தம். 

  5. சம்பந்தமே இல்லாமல் உங்களுக்கு திடீரென மெசேஜ்களோ, அழைப்புகளோ வந்தால், உங்கள் சாதனம் மால்வேர் தாக்குதலில் சிக்கி இருக்க வாய்ப்புள்ளது.

  6. உங்கள் சாதனத்திற்கு திடீரென நீங்கள் இந்த பொருளை வாங்க முயற்சிப்பதாக மெசேஜ் வந்தால், போனை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என அர்த்தம். 

  7. உங்கள் போனுக்கு திடீரென பல பாப்அப் மெசேஜ்கள் வந்தால், அது மால்வேர் தாக்குதலின் ஆரம்பக்கட்ட அறிகுறியாக இருக்கலாம். 

  8. திடீரென உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் டேட்டா பயன்பாடு அதிகரித்தால் அது ஹேக்கர்களின் வேலையாக இருக்கலாம். 

இந்த 8 அறிகுறிகளில் ஏதாவது ஒன்று உங்கள் சாதனத்தில் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை உங்கள் சாதனம் ஹேக் செய்யப்பட்டது போல் நீங்கள் உணர்ந்தால், உடனடியாக அதை ரீசெட் செய்வது நல்லது. குறிப்பாக உங்களுடைய ஜிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டிருந்தால், அதற்கான அறிவிப்பு வந்ததும் பாஸ்வேர்டை மாற்றிவிடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com