ஒரு நிலவு முழுக்க மீத்தேன் இருந்தா என்ன ஆகும்? இதோ டைட்டன் ரகசியம்!

 Titan moon Fire
Titan moon Fire
Published on

பூமியில் இருக்கும் மீத்தேன் வாயு வெளிப்படும்போது உடனடியாக அங்கு தீப்பிடிக்கும் நிகழ்வுகள் ஏற்படுகின்றன. வயல்வெளிகளில் சிறிது நேரம் மீத்தேன் வெளிப்பட்டால் தீப்பிடிக்கும் சம்பவங்களை, கொள்ளிவாய் பிசாசு நடமாட்டம் என்று கூறி சிறுவர்களை பயமுறுத்தி வைப்பார்கள். மிகச் சிறிய மீத்தேன் வெளிப்பாடே இப்படி இருந்தால், கொஞ்சம் அதிகளவில் மீத்தேன் இருக்கும் இடத்தில் தீப்பற்றினால் அந்த இடமே வெடித்து சிதறும்.  இப்படி ஒப்பீடு இருக்கையில் ஒரு நிலவு முழுக்க மீத்தேன் வாயு நிரம்பி இருந்தால் எப்படி இருக்கும்? 

அப்படி ஒரு நிலவு தான் சனிக்கிரகத்தின் துணைக் கோளான டைட்டன் ஆகும். இது அந்த கிரகத்தின் மிகப்பெரிய நிலவாக உள்ளது. இந்த நிலவு தான் சூரிய மண்டலத்தில் வளிமண்டலத்தை கொண்டுள்ள ஒரே துணைக்கோளாக இருக்கிறது. மீத்தேனும் ஹைட்ரோகார்பனும் நிரம்பி ஆறாக ஓடி இருக்கும் டைட்டன் நிலவில் யாரேனும் ஒரு தீக்குச்சியை பற்ற வைத்தால் என்ன ஆகும் என்று தெரியுமா?  

பூமியை விட சற்று அடர்த்தியான வளிமண்டலத்தை டைட்டன் நிலவு பெற்றுள்ளது. இந்த வளிமண்டலத்தில் நைட்ரஜன் வாயு 95% மற்றும் மீத்தேன் 4% அதிகமாகவும், மீதியுள்ள 1 சதவீதத்தில் ஹைட்ரோ கார்பனின் மூலக்கூறாக கொண்ட சில எரிவாயுகள் உள்ளன. மனிதர்கள் வாழத் தேவையான ஆக்ஸிஜன் இங்கு 0.01% அளவில் அரிதாக உள்ளது. இங்கு வளிமண்டலத்தில் மீத்தேன் நிறைய இருப்பதால் இங்கு மழை பெய்தால் கூட அதிலும் மீத்தேன் நிரம்பி இருக்கிறது. இதனால் இங்கு மீத்தேன் கடல் கூட உள்ளது. 

இந்த அளவுக்கு எரிவாயு கொட்டிக் கிடக்கும் ஒரு நிலவை ஒரு சிறு தீப்பொறி போதுமே எரிய வைக்க. இவ்வளவு எரிவாயு மிக்க நிலவில் தீப்பிடித்தால் எந்தளவுக்கு பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என்று சிந்தனைகளும் விஞ்ஞானிகளுக்கு உண்டு. டைட்டன் நிலவின் வெப்பநிலையை கேள்விப்பட்டால் நீங்கள் உறைந்து போவீர்கள். இதன் வெப்பநிலை –180 டிகிரி செல்சியஸ் முதல் –270 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இத்தகைய மோசமான உறைப்பனி நிலையில் மனிதர்கள் வாழ்வது சாத்தியம் அல்ல. இங்கு அனைத்தும் உறைந்து போகும். ஆனால்,  மீத்தேன் உள்ளிட்ட சில எரிவாயுக்கள் இங்கு திரவ நிலையில் ஆறாக ஓடி மீத்தேன் கடலுடன் கலக்கின்றன. 

இங்கு தீப்பிடிக்க வைக்க லைட்டரை கொளுத்தினாலும் அது எரியாது, தீக்குச்சியை பற்ற வைத்தாலும் அது பற்றி கொள்ளாது. அந்த அளவிற்கு டைட்டனில் உறைபனி நிலை மோசமான அளவில் உள்ளது. இதை விட நெருப்புக்கு தேவையான எரிபொருள் கடல்போல இருந்தாலும் , ஆக்சிஜன் இல்லாத காரணத்தில் நெருப்பு தோன்றாது. ஆக்சிஜன் வேண்டி , நாம் ஒரு ஆக்சிஜன் சிலிண்டரை எடுத்துச் சென்று நெருப்பை பற்ற வைக்க முயற்சி செய்தாலும் அங்குள்ள –180 டிகிரி வெப்பநிலையில் தீப்பற்றும் வாய்ப்பு இருப்பது இல்லை. அத்துடன் அங்கு ஈர்ப்பு விசையும் குறைவாக இருப்பதால் , தீயும் கொழுந்து விட்டு எரியாமல் அணைந்து விடும். 

நிலவை எரிக்க தனியாக ஒரு தீக்குச்சியை தேடத் தேவையில்லை. அங்கு மீத்தேன் வாயுவால் இடியும் மின்னலும் ஏற்படுகின்றன. ஆனாலும், அதிலுள்ள தீப்பொறி வளிமண்டலத்தில் உள்ள மீத்தேன் வாயுவில் பட்டாலும் , எந்த ஒரு விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. காரணம் அங்கு மிகவும் அரிதாக இருக்கும் ஆக்சிஜன் எதனுடனும் வினை புரியாமல் இருக்கும். டைட்டனில் உள்ள ஆக்சிஜன் கார்பனுடன் இணைந்து புளோரன்ஸ் என்று தனித்து விடப்பட்டுள்ளது. 

இப்போது ஒரு 25% ஆக்சிஜனை டைட்டன் நிலவு வளிமண்டலத்தில் செலுத்தினால் , அங்கு ஏற்படும் மின்னலில் தானாக நிலவு தீப்பிடிக்கும் . காரணம் 25% ஆக்சிஜன் நெருப்பை எரிய வைக்கும் , ஆனால் , ஈர்ப்பு விசை குறைவாக இருப்பதாலும், கொடூர உறைபனி வெப்பநிலையில் இருப்பதால் முழு நிலவும் எரியாமல் , பகுதியளவு எரிய அனுமதிக்கும் . வருடக் கணக்கில் இந்த தீ பொறுமையாக இருந்து மீத்தேன் கடல் காலியாகும் வரை எரியும். ஆனால், இதற்கும் வாய்ப்பு குறைவு, ஆக்சிஜன் ஒருவேளை புளோரன்ஸ் ஆக மாறி தனித்து இருந்தால் எந்த தீயும் பற்றாது.

பற்றி முழுவதும் எரிந்து விட்டால் வெளியிடும் கார்பன்கள் பச்சை இல்ல வாயுவை வெளியிட்டு, ஆக்சிஜன் அளவை நிலைப்படுத்தலாம். ஆக்சிஜன் இருந்தால் அந்த இடத்தில் உயிர்கள் உருவாகும் மனிதர்கள் வாழலாம். ஆனால், 25% ஆக்சிஜன் கொண்டு செல்வது சாத்தியம் இல்லையே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com