ஆன்லைன் வேலைகளுக்கு உகந்த டாப் 10 நாடுகள்! 

Top 10 Best Countries for Online Jobs
Top 10 Best Countries for Online Jobs
Published on

2019 க்கு முன்பு அதாவது கொரோனா காலகட்டத்திற்கு முன்பு வீட்டிலிருந்தே பணி செய்யும் முறை அந்த அளவுக்கு பிரபலமாக இல்லை. ஆனால் கொரோனா காலத்தில் உலகமே முடங்கியதால் பல்வேறு பணிகளை வீட்டிலிருந்து செய்யும்படியான ஆன்லைன் வேலையாக மாறியது. இருப்பினும் கொரோனா முடிந்த பிறகு பல நிறுவனங்கள் வழக்கமான அலுவலக பணி முறைக்கே மாறினாலும் சில நிறுவனங்கள் இன்றளவும் பணியாளர்களை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்கின்றனர்.

உலகமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், பெருநகரங்களில் மட்டுமல்லாமல் ஒரு கிராமத்தில் இருந்துகூட ஊழியர்கள் வேலை செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இத்தகைய வேலைமுறையில் தனிநபரின் பாதுகாப்பு, வசதிகள், பொருளாதாரம் போன்றவற்றையும் கவனிக்க வேண்டியுள்ளது. சமீபத்தில் ஆன்லைன் வழியாக பணிபுரிவதற்கு உகந்த பத்து நாடுகளின் பட்டியல் வெளிவந்துள்ளது. இதில் வீட்டிலிருந்து பணி செய்வதற்கு சிறப்பான அம்சங்கள் கொண்ட பட்டியலில் முதல் இடத்தில் டெர்மார்க் இருக்கிறது. 

இணையத்திலிருந்து பாதுகாப்பாக பணி செய்வதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. இதே போல ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளும் முன்னிலையில் உள்ளன. ஆனால் ஸ்வீடன் நாட்டில் சரியான உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை என்பதால் அது 15 ஆம் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் சமூக பாதுகாப்பில் முன்னணியில் உள்ளது. 

ஆன்லைன் வழியாக பணி செய்வதற்கு சரியான நாடுகளின் பட்டியலில் கனடா 14 ஆம் இடத்திலும் அமெரிக்க 16 வது இடத்திலும் உள்ளன. முதல் 10 இடங்கள் எனப் பார்க்கும்போது,

  1. டென்மார்க் 

  2. நெதர்லாந்து 

  3. ஜெர்மனி 

  4. ஸ்பெயின்

  5.  ஸ்வீடன் 

  6. போர்ச்சுகல் 

  7. எஸ்டோனியா 

  8. லிதுனியா 

  9. அயர்லாந்து 

  10. ஸ்லோவாக்கியா 

ஆகிய நாடுகள் உள்ளன. இதில் பெரும்பாலான நாடுகளில் வீட்டிலிருந்தே பணி செய்வதற்கு ஏதுவான கட்டமைப்பு வசதிகள் சிறப்பான முறையில் உள்ளது. எதிர்காலத்தில் இந்தியா இந்தப் பட்டியலில் இடம் பிடிக்குமா என நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

ஆனால் இன்றளவும் இந்தியாவில் இணையத் துறை சார்ந்த தெளிவு பெரும்பாலான மக்களிடம் இல்லை. எனவே இணையம் வழியாக பணிபுரிவது சார்ந்த விஷயங்களில் இந்தியா முன்னேற பல ஆண்டுகள் தேவைப்படலாம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com