இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் அதே சமயம் அதிக பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஐந்து கார்களை மக்களுடைய ரேட்டிங்கை அடிப்படையாகக் கொண்டு பட்டியலிடப்பட்டிருக்கிறது.
உலகம் முழுவதுமே வாகனங்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரம் வாகனங்களால் ஏற்படக்கூடிய விபத்தும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வாகனம் வாங்குபவர்கள் காரின் உடைய பாதுகாப்பு முறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். மேலும் அரசும் வாகனங்களின் உடைய பாதுகாப்பு தன்மையை அதிகரிக்க நிறுவனங்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றது.
இதனால் கார் உற்பத்தி நிறுவனங்கள் வாகனங்களுடைய பாதுகாப்பு தன்மையை பல மடங்கு கூடுதல் படுத்தி இருக்கின்றனர். மேலும் வாகனங்கள் உடைய பாதுகாப்புத் தன்மையை குறித்து பல்வேறு கட்ட சோதனைகளும் நடத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் இந்தியாவின் அதிக பாதுகாப்பு தன்மையோடு உள்ள ஐந்து கார்களை மக்களினுடைய ரேட்டிங் அடிப்படையாக வைத்து பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறு மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ் யு வியான XUV700 கார், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங்க்கையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 4 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்று இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச் மாடல் கார் பாதுகாப்பான கார் என்று ஐந்து சதவீத ரேட்டிங்கை பெற்று இருக்கிறது. ஸ்கார்பியோ எஸ்யூவியின் புதிய வெர்ஷன் கார், குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் 58.18 புள்ளிகளை பெற்று இருக்கிறது. பயணிப்பவர்களுடைய பாதுகாப்பை 90 சதவீதம் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா-வின் XUV300 குளோபல் என்சிஏபி 5 ஸ்டார் ரேட்டிங்ஸை பெற்றிருக்கிறது.
நாட்டில் அதிகம் விற்பனையாகும் டாடா நெக்ஸான் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. இருப்பினும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சோதனையில் 3 சதவீத ஸ்டாரை மட்டுமே பெற்றுள்ளது. இந்த வகை கார்கள் கூடுதல் பாதுகாப்பை கொண்ட அதிகம் விற்பனையாகும் கார்களாக பட்டியலிடப்பட்டிருக்கின்றன.