செயற்கை நுண்ணறிவு பல்வேறு தொழில்களில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்ட தொழில்நுட்பமாக மாறியுள்ளது. இது தொடர்ந்து வளர்ந்து வருவதால் பல புதிய மற்றும் நம்பிக்கைக்குறிய தொழில்கள் உருவாகி வருகின்றன. இந்தப் பதிவில் வரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் 5 அதிநவீன AI தொழில்நுட்பங்களைப் பற்றி பார்க்கலாம்.
1. Generative Adversarial Network (GAN): ஜெனரேட்டிவ் அட்வெஸரியில் நெட்வொர்க்குகள் என்பது ஏஐ அல்காரிதம்களின் ஒரு பிரிவாகும். படங்கள், வீடியோக்கள் மற்றும் டெக்ஸ்ட் போன்ற எதார்த்தமான உயர்தர செயற்கைத் தரவுகளை உருவாக்கும் திறனுக்காக, GAN பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தத் தொழில்நுட்பம், கலை, வடிவமைப்பு, பொழுதுபோக்கு மற்றும் இயந்திரக் கற்றல் மாதிரிகளை பயிற்றுவிப்பது போன்ற பல துறைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
2. Reinforcement Learning (RL): RL என்பதும் ஒரு ஏஐ தொழில்நுட்பம் ஆகும். இது நிகழ் நேரத்தில் ஒரு சூழலில் தொடர்பு கொண்டு அதன் மூலம் வெகுமதிகள் அல்லது கருத்துக்களை பெறும் செயல்களை கற்றுக்கொள்ள உதவுகிறது. கேம்கள், ரோபோட்டிக்ஸ் போன்ற சிக்கலான பணிகளில் இது பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
3. Explainable AI: விளக்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு என்பது AI மாடல்களுடன் தொடர்புடைய மிகப்பெரிய பிரச்சனையை தீர்க்கிறது. ஏஐ கணிப்புகள் மற்றும் முடிவுகளுக்கு வெளிப்படையான விளக்கம் வழங்கும் நுட்பங்கள் மற்றும் வழிமுறைகளை மேம்படுத்துவதில் XAI கவனம் செலுத்துகிறது. இது சுகாதாரம், நிதி மற்றும் தன்னாட்சி அமைப்புகள் போன்ற துறைகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பாதுகாப்பு போன்றவற்றிற்கு முக்கியமாகும்.
4. Federated Learning: இந்திரக் கற்றலின் அடுத்தகட்ட அணுகுமுறையே இந்த FL. இது தரவை மையப்படுத்தாமல் பரவலாக்கப்பட்ட தரவு மூலங்களின் பயிற்சி மாதிரிகளை அனுமதிக்கிறது. அதாவது நாம் சொல்வதை வைத்து அதற்கு ஏற்ற மாதிரியான தரவுகளை தானாகவே உருவாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்தத் தொழில்நுட்பம் தனியுரிமை பாதுகாப்பு, சுகாதாரம், நிதி மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் பயன்பாடுகளில் பெரும் உதவியாக இருக்கும்.
5. Natural Language Processing (NPL) Advancements: சமீபத்திய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை இந்தத் தொழில்நுட்பம் கண்டுள்ளது. டீப் லேர்னிங் மற்றும் பெரிய அளவிலான மொழி மாதிரிகளின் எழுச்சிக்கு இதுவே அடித்தளம். இத்தகைய NPL மாதிரிகள் மொழிபெயர்ப்பு, உணர்வு பகுப்பாய்வு, கேள்வி பதில் மற்றும் உரை உருவாக்கம் போன்ற வேலைகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளன. இதன் முன்னேற்றமே மிகவும் அதிநவீன ChatBot, உள்ளடக்க உருவாக்கம், மெய்நிகர் உதவியாளர் போன்ற பல புதிய விஷயங்கள் உருவாக வழி வகுத்தன.