பைக் சர்வீஸில் செலவைக் குறைக்கும் தந்திரங்கள்.. இது சூப்பரா இருக்கே! 

Tricks to reduce costs in bike service.
Tricks to reduce costs in bike service.
Published on

இன்றைய காலத்தில் இருசக்கர வாகனங்கள் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கமாகவே உள்ளது. சரியான நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்லவும், வேலை, ஊர் சுற்றுதல் என பல விஷயங்களுக்கு பைக் பயனுள்ள வகையில் உள்ளது. இப்படி நமக்கு பலவகையில் உதவும் இருசக்கர வாகனத்தை நாம் அவ்வப்போது பராமரிப்பது அவசியம். இல்லையெனில் நீண்ட காலம் கழித்து சர்வீஸ் விடும்போது அதிக செலவை நமக்கு வைத்துவிடும். இப்படி சர்வீசின்போது அதிக செலவுகளைத் தவிர்க்க என்ன செய்யலாம் என இந்தப் பதிவில் பார்க்கலாம். 

  1. முதலில் உங்கள் பைக் டயருக்கு சரியான அளவு காற்று நிரப்புங்கள். இதை நீங்கள் செய்தாலே பைக் நீண்ட நாள் எந்த பிரச்சினையும் இல்லாமல் ஓடும். 

  2. ஏதாவது பாகம் உடைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ உடனடியாக மாற்றுவது நல்லது. அதை அப்படியே விட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சேதம் அதிகரிக்கும். இதனால் பைக் சர்வீஸில் செலவுகள் அதிகரிக்கலாம்.  

  3. 2000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை ஏர் பில்டரை சுத்தம் செய்வது நல்லது. 

  4. 5000 கிலோ மீட்டருக்கு ஒருமுறை இன்ஜின் ஆயிலை மாற்ற வேண்டும்.

  5. 12,000 முதல் 15,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை செயின்ஸ் ஸ்ப்ராஜெக்ட் புதிதாக மாற்றுவது நல்லது. 

  6. பிரேக் ஷூ அல்லது பிரேக் பேடுகளை சரியான நேரத்தில் மாற்றுங்கள். 

  7. பைக் செயினுக்கு அவ்வப்போது லூப்ரிகேட் செய்யுங்கள். 

  8. 20000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை புதிய டயர்களை மாற்ற வேண்டும்.

  9. பேட்டரிக்கு அவ்வப்போது சார்ஜ் செய்து பயன்படுத்தினால், ஐந்து ஆண்டுகளாவது நீடித்து உழைக்கும். 

  10. வாகனத்தை அதிகமாக வெயில் அல்லது மழையில் நிறுத்தாதீர்கள். 

  11. கிளட்ச் பிளேட்டுகளை 25,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை மாற்றுங்கள். 

இதையும் படியுங்கள்:
மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைக்க நம்மாழ்வார் காட்டும் வழி!
Tricks to reduce costs in bike service.

பைக்கில் உள்ள தனித்தனி பாகங்களை அவ்வப்போது பராமரித்து வந்தாலே, சர்வீசின்போது ஆகும் அதிக செலவுகளை நீங்கள் தவிர்க்கலாம். வாரம் ஒரு முறையாவது பைக்கை நன்கு கழுவுங்கள். அப்படியே எதையும் கண்டு கொள்ளாமல் விட்டால் பைக்கில் உள்ள இரும்பு துருப்பிடித்துவிடும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றுக்கொண்டு ஓவர்லோட் பயணம் செய்யாதீர்கள். 

மூன்று மாதத்திற்கு ஒரு முறை பைக்கை தவறாமல் சர்வீஸ் செய்தாலே, வாகனம் நீண்ட காலம் எந்த செலவும் வைக்காமல் ஓடும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com