பயனரின் கணக்கை அனுமதியின்றி தன்வசமாக்கிய ட்விட்டர் நிறுவனம்!

பயனரின் கணக்கை அனுமதியின்றி தன்வசமாக்கிய ட்விட்டர் நிறுவனம்!
Published on

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதிலிருந்தே அதில் அவர் செய்துவரும் மாற்றங்கள் மக்கள் விரும்பும்படியாக இருக்கவில்லை. இப்போது என்னவென்றால் ட்விட்டரின் பெயரை மொத்தமாக மாற்றிவிட்டார். அதாவது ட்விட்டர் இனி எக்ஸ் (X) என்றுதான் அழைக்கப்படும். 

ட்விட்டர் தொடங்கியது முதலிலே அதன் லோகோவில் இருந்த நீலப் பறவையை, அதிரடியாக தற்போது எக்ஸ் என்று மாற்றிவிட்டார். இதைத்தொடர்ந்து மற்றொரு சர்ச்சைக்குரிய செயலை ட்விட்டர் நிறுவனம் செய்துவிட்டது. ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ் எக்ஸ் என மாற்றிய பிறகு, ட்விட்டரில் @X என்ற செயல்பட்டு வந்த ஒருவரின் கணக்கை அந்த உரிமையாளரின் எவ்வித அனுமதியுமின்றி ட்விட்டர் நிறுவனம் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டது.  

@X என்ற கணக்கில் செயல்பட்டு வந்த Gene X Hwang என்பவரிடமிருந்து ட்விட்டர் கணக்கு முற்றிலுமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இந்த தனிநபர் கணக்கை எலான் மஸ்கின் நிறுவனம் எவ்வித அனுமதியுமின்றி, கையகப்படுத்துவதற்கு இழப்பீடும் வழங்காமல் திருடிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கணக்கை அதன் உரிமையாளர் சுமார் 16 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாமல் எலான் மஸ்க் அந்தக் கணக்கை தன்னுடைய அதிகாரப்பூர்வ கணக்காக மாற்றிக்கொண்டார். 

மேலும் அவருடைய கணக்கிற்கு பதிலாக, @X12345678998765 என்ற புதிய யூசர் பெயரை வழங்கியுள்ளது. அவருடைய அனுமதியின்றி திருடப்பட்ட கணக்கிற்கு ட்விட்டர் நிறுவனம் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப் படவில்லை. எலான் மஸ்கின் இப்படிப்பட்ட மோசமான செயல்கள் ட்விட்டர் நிறுவனத்தின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை சிதைத்து வருகிறது. குறிப்பாக பயனர்களின் உரிமைகள் மற்றும் அனுமதிகளை மஸ்க் புறக்கணித்து வருவது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 

இதனாலேயே ட்விட்டரில் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மாற்றங்கள் காரணமாக, பல பயனர்கள் இந்த தளத்தைவிட்டு வெளியேறினர். என்னதான் அந்த நிறுவனம் அவருக்கு உரிமையானதாக இருந்தாலும், இவர் இப்படியெல்லாம் நடந்துகொள்ளக்கூடாது என இவருக்கு எதிராக பலர் கண்டனக்குரல் எழுப்பி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com