ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் இருந்த 'எக்ஸ்' (X) லோகோ அகற்றப்பட்டது!

ட்விட்டர் தலைமை அலுவலகத்தில் இருந்த 'எக்ஸ்' (X) லோகோ அகற்றப்பட்டது!

டந்த ஜூலை 24ம் தேதி ட்விட்டரின் பெயர், லோகோ என அனைத்தையும் X என்று எலான் மஸ்க் மாற்றியதால் அதிக விமர்சனங்களை எதிர்கொண்டாலும், எலான் மஸ்க் மீதும் அவருடைய எதிர்கால குறிக்கோள் மீதும் நம்பிக்கை இருக்கும் பலர், தொடர்ந்து X தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து சான்பிரான் சிஸ்கோவில் இருக்கும் எக்ஸ் தலைமை அலுவலகத்தின் மாடியில், X லோகோ லைட் செட்டப் வடிவில் பொருத்தப் பட்டுள்ளதை எலான் மஸ்க் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார். 

இதை இணையத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டு தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆனால் இதில் பிரச்சனை என்னவென்றால், அந்த லோகோ பொருத்தப்பட்டுள்ள கட்டடத்தின் அருகே வசிக்கும் மக்களுக்கு, அதிலிருந்து வரும் அதிதீவிரமான வெள்ளை ஒளி பார்ப்போரின் கண்களை பாதிப்பதோடு மட்டுமின்றி, எரிச்சலையும் ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது. இதனால் அங்கிருந்த மக்கள் இது தொடர்பாக புகாரளித்த நிலையில், எக்ஸ் சிம்பல் நீக்கப்பட்டது. மேலும், அது அலுவலகக் கூரையின் மேல் நிலையற்றதாக இருப்பதாகவும், ஒரு அழுத்தமான நிலநடுக்கம் ஏற்பட்டாலே அந்த லோகோ கீழே விழுந்து மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என எண்ணற்ற புகார்கள் வந்ததால், அந்நிறுவனமே லோகோவை உடனடியாக அகற்றியது. 

இப்படி பலவிதமான ஷாக் அப்டேட்டை கொடுத்து வரும் X என மாறி இருக்கும் ட்விட்டர் சமூக வலைதளத்தில், புதிதாக 'டார்க் மோட்' வசதி வழங்கப்பட இருக்கிறது. இது ஒன்றும் புதியதில்லையே, இதுபோன்று பல நிறுவனங்கள் வழங்குகிறார்களே என நீங்கள் கேட்டால், இனி எக்ஸ் தளத்தை நீங்கள் டார்க் மோடில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். ஏற்கனவே சாதாரணமாக இருக்கும் டீஃபால்ட் மோட்டில் இயக்குவதற்கான வசதி முற்றிலும் தடை செய்யப்படவிருக்கிறது. 

இனி எக்ஸ் தளத்தில் எல்லாமே இருட்டாகத்தான் இருக்கும். இத்தகைய அதிரடி மாற்றங்களால் அந்த தளம் இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வருகிறதா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com