
மின்னல் வானில் நிகழும் ஒரு அற்புதம். மழைக்காலங்களில் நடக்கும் வாண வேடிக்கை. மின்னல்களில் பல வகை உண்டு. அவை என்னவென்பதை பார்ப்போமா?
1. CG என்று அழைக்கப்படும் Cloud to Ground அதாவது மேகத்திலிருந்து பூமிக்கு பாயும் மின்னல். இது தான் அதிகமாக நிகழும் மின்னல். அது மட்டுமல்ல மிகவும் அழிவு ஏற்படுத்தக் கூடிய மின்னலும் இதுவே. இந்த வகை மின்னலின் போது மின்சார சக்தி மேகத்திலிருந்து தரைக்கு பாய்கிறது. இந்த வகை மின்னல்கள் தான் மரங்களையும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை தாக்கிக் கொல்கிறது.
2. IC என்று அழைக்கப்படும் Intra Cloud Lightning . இவ்வகை மின்னல் ஒரு மேக வங்கிகுள்ளேயே (கிளவுட் பேங்க் ) ஏற்படும் மின்னலாகும். இதை 'SHEET மின்னல்' என்றும் அழைப்பார்கள். ஒரு மேகத்துக்குள்ளேயே மின்னோட்டங்கள் பிரிந்து பிரிந்து சேர்வதால் உண்டாகும் மின்னல் தான் இது.
3. CC மேகத்துக்கு மேகம் தாவும் Cloud to Cloud மின்னல் ஒரு மேகத்திற்கும் மற்றோரு மேகத்திற்கும் இடையே நடக்கும் எலெக்ட்ரிக்கல் சார்ஜ் பரிமாற்றம் தான் இவ்வகை மின்னல் ஏற்படுவதற்கு காரணம். இவ்வகை மின்னல்கள் விமானத்திற்கு ஆபத்து விளைவிக்க கூடியதாகும்.
4. Heat மின்னல் என்று அழைக்கப்படும் மின்னல். இவ்வகை மின்னல்கள் தூரத்தில் பளிச் பளிச் என்று மின்னும். ஆனால், அதன் இடி ஓசை நம் காதுகளுக்கு வந்து சேராது.
5. Bolt From The Blue மின்னல் இந்த வகை மின்னல் மிகவும் அரிதாக தான் தோன்றும். தலைக்குமேல் மேகம் ஒன்றும் இல்லாத போதும் மின்னல் தாக்கும். இது உண்டாகும் விதம் மிகவும் ஆச்சர்யமான நிகழ்வு.
இந்த வகை மின்னல் வெகு தூரத்தில் வெகு உயரத்தில் உண்டாகி செங்குத்தாக பூமியை நோக்கி பாயாமல் கிடைமட்டமாக அதாவது ஹாரிசாண்டலாக வெகு தூரம் வானில் பயணம் செய்து மழை மேகமில்லாத இடத்தை தாக்கும். 'நீல வானத்திலிருந்து விழுந்த இடி' என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்.
6. பால் மின்னல் அதாவது Ball Lightning, இது புரிந்து கொள்ளப்படாத ஒரு மின்னல். ஒளிரும் கோளம் போல வானில் தோன்றும் மின்னலாகும் இது.
7. Spider Lightning - சிலந்தி வலை மின்னல். புயல் மேகத்தின் அடிபாகத்தில் கொடு கோடாக தோன்றும் ஒளி தான் இப்படி அழைக்கப்படுகிறது.