
மழை பெய்யும் போது குடை பிடித்து செல்வது அனைவரின் வழக்கமான செயலாகும். ஆனால் மழை பெய்யும் போது, தண்ட வாளத்தைக் கடக்கும் போதும் தண்டவாளத்திற்கு அருகில் செல்லும் போதும், குடை பிடித்து (umbrella near railway tracks) செல்லக்கூடாது. இதற்கான அறிவியல் காரணங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்சார திரும்பும் (electrical return) பாதைகளாக ரயில் தண்டவாளங்கள் செயல்படுகின்றன. ரயில் எஞ்சினுக்கு 25 kV (கிலோ வோல்ட்) ரயிலில் உள்ள மேல்நிலை கம்பிகளில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. ஒரு சிறப்பு அமைப்பு மூலம் இந்த வழியில் வரும் மின்னோட்டம் தரையில் சென்று , தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதனால்தான் மின்சாரத் தாக்கம் ரயில்களில் பயணிப்பவர்களுக்கு ஏற்படுவதில்லை. ஆனால் இந்த மின்னோட்டத்தால் மக்களுக்கு தரையில் செல்லும்போது மின்சாரம் தாக்குவதற்கு ஒரு குடை கூட காரணமாக இருக்கலாம்.
தண்டவாளத்திற்கு மேலே 25 ஆயிரம் வோல்ட் மின்னோட்டத்தை கொண்டு செல்லும் கம்பிகள் இருப்பதால் ரயில் தண்டவாளங்கள் வழியாக மின்னோட்டம் தொடர்ந்து செல்கிறது. சாதாரண கம்பிகளைப் போல இருந்தாலும் அவற்றில் உள்ள மின்னோட்டம் மிக அதிகமாக இருக்கும். பல குடைகளில் உலோக கம்பிகள் , எஃகு சட்டங்கள் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ரயில் பாதைகளில் நாம் குடையுடன் நடந்து செல்லும் போது மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் எஃகு கம்பிகள் இருக்கும்.
இந்த கம்பியை குடை தொடாமல் இருந்தாலும் அதில் மின்னோட்டம் பாய்ந்து பெரிய மின்சார தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேல்நிலை கம்பிகளுக்கு மிக அருகில் குடை இருந்தால் மிகக் கடுமையான மின்சார தாக்கத்தை கொடுக்கும். இந்த தாக்கம் வீடுகளில் ஏற்படும் மின்சார தாக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஆகவே ரயில் பாதைகளுக்கு அருகில் எந்த ஒரு சூழ்நிலையிலும் குடையை பயன்படுத்தக் கூடாது .
அதேபோல் நடைமேடைகளில் செல்லும் பொழுதும் குடையை உயர்த்த கூடாது. ஏனென்றால் தற்செயலாக கம்பிகளுக்கு மிக அருகில் வந்தால் அதுவும் நமக்கு மின்சாரத் தாக்கத்தை ஏற்படுத்தும். இதை ஒரு பொழுதும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது தொடர்பாக இந்திய ரயில்வே பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது.
ரயில்வே பிளாட்பாரங்களில் குடைகளை பயன்படுத்தலாம். ஆனாலும் ரயில் தண்டவாளங்களில் குடையை (umbrella near railway tracks) உயர்த்தி பிடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் மேற்கூறிய ஆபத்துக்களை மனதில் வைத்து குடையை தண்டவாளங்களில் பிடிக்காமல் தவிர்த்து விட வேண்டும்.