UPI லிமிட் மாற்றம்... யாருக்கு நல்லது?

UPI Limit Change
UPI Limit Change
Published on

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக UPI மூலமாக நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் மாற்றப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் வருமான வரி செலுத்துவோருக்கு அதிக நன்மைகளை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த மாற்றங்கள் வருகிற அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

UPI என்பது இந்திய தேசிய கொடுப்பனவுக் கழகம் (NPCI) உருவாக்கிய ஒரு உடனடி பணப்பரிவர்தனை முறையாகும்.‌ இது வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாக பணத்தை அனுப்பவும், பெறவும் உதவுகிறது. Google Pay, Phonepe, Paytm போன்ற பல்வேறு மொபைல் செயலிகள் இந்த யுபிஐ தளத்தைப் பயன்படுத்துகின்றன.‌

UPI-யின் வருகையால் இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பெருமளவு அதிகரித்துள்ளன. இதற்கு முக்கிய காரணம் இந்த பணப்பரிவர்த்தனை செய்வது மிகவும் எளிதாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதுதான். மேலும் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரி விதிக்கப்படுவதில்லை என்பது இதன் பிரபலத்திற்கு ஒரு முக்கிய காரணம்.‌

முன்னதாக யுபிஐ மூலம் மருத்துவக் கட்டணம், கல்விக் கட்டணம் மற்றும் அரசு பத்திரங்களுக்கான கட்டணம் ஆகியவற்றுக்கு ஒரு ரூ.1 லட்சம் மட்டுமே அதிகபட்சமாக செலுத்த முடியும் என்ற வரம்பு இருந்தது. இந்த வரம்பு, குறிப்பாக பெரிய தொகைகளை பரிவர்த்தனை செய்ய விரும்பும் நபர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால், யூபிஐ லிமிட்டை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்தன.

இதையடுத்து ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா இந்த வரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்தியது. ஆனால், வருமான வரி செலுத்துவோருக்கான வரம்பும் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்தன. இந்த கோரிக்கைக்கு இணங்கி RBI வருகிற அக்டோபர் 15 முதல் இந்த மாற்றத்தை அமல்படுத்த உள்ளது. 

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் துரியோதனன் பெயரில் நில வரி செலுத்தும் ஒரே கோயில்!
UPI Limit Change

இந்த புதிய மாற்றத்தால் வருமான வரி செலுத்துவோர் இனி யுபிஐ மூலம் எளிதாகவும், விரைவாகவும் பெரிய தொகைகளை பரிவர்த்தனை செய்ய முடியும். UPI என்பது மிகவும் பாதுகாப்பான பணப் பரிவர்த்தனை என்பதால், அதிகமாக பணப் பரிவர்த்தனை செய்யும்போது, பாதுகாப்பு குறித்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. மேலும், இதன் மூலமாக வருமான வரி செலுத்துவோர் கூடுதல் வரி செலுத்துவதைத் தவிர்க்க முடியும். 

இந்த மாற்றம் இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது. இது டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை மேலும் ஊக்குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com