காப்புரிமை செய்யப்பட்ட மற்றொரு நிறுவனத்தின் தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட் வாட்சில் பயன்படுத்தியதால் விற்பனைக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.
உலகின் முன்னணி தொலைபேசி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆப்பில் கடந்த செப்டம்பர் மாதம் அதிநவீன வசதிகளை கொண்ட ஆப்பிள் சீரியஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய இரண்டு புதிய ஸ்மார்ட் வாட்ச் ரகங்களை அறிமுகம் செய்தது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்களை இயக்க தொடுதுறைகளை தொட வேண்டிய அவசியம் இல்லை. விரல்களை இரண்டு டப் செய்தால் தொலைபேசி அழைப்புகளை ஏற்க முடியும். மேலும் பல்வேறு கூடுதல் அம்சங்களை கொண்டு இருந்த இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் உலகம் முழுவதும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனம் சீரிஸ் 9 மற்றும் அல்ட்ரா 2 ஆகிய ஸ்மார்ட் வாட்ச் உங்களுக்கு பயன்படுத்திய pulse oximeter என்ற தொழில்நுட்பம் masimo என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இதற்கான காப்புரிமையை masimo நிறுவனமே வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
Masimo நிறுவனம் அமெரிக்கா நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனம் அல்ட்ரா 2 மற்றும் சீரிஸ் 9 ஆகிய இரண்டு ஸ்மார்ட் வாட்ச்களை விற்பனை செய்ய தடை விதித்திருக்கிறது. தற்போது ஆப்பிள் நிறுவனம் தடை உத்தரவை நீக்க கோரி மேல்முறையீடு செய்துள்ளது.